கான் சிட்டி விமர்சனம் 3.5/5
கான் சிட்டி விமர்சனம் 3.5/5
நடுத்தர வர்க்க வாழ்க்கை, மாதா மாதம் வீட்டுத்தவணை உள்ளிட்ட பல செலவுகள்.வரவுக்கு மேல் செலவு.கடன் வாங்குகிறார்.கட்ட முடியவில்லை.இதனால், தான் பணிபுரியும் மின்வாரியத்தில் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார் நாயகன்.
அந்த நிலையில்,நாயகி அன்னாபென் உட்பட பலர் முதலீடு செய்கிறார்கள்.ஒரு கட்டத்தில் எல்லோரும் பெரும் சிக்கலில் சிக்குகிறார்கள்.வம்பு,வழக்கு,சிறை என்று போய் கடைசியாக ஊரைவிட்டே போகிறார்கள்.போனவர்கள் மீண்டும் திரும்ப வருகிறார்கள். மீண்டும் மோசடி செய்கிறார்கள்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் கான்சிட்டி.
எதிர்மறை நாயகனாகப் பார்த்துப் பழக்கப்பட்ட அர்ஜூன்தாஸ் நேர்மறை வேடத்தில் நடிக்கிறாரே என்று பார்த்தால் போகப்போக அவர் செய்யும் செயல்கள் அடப்பாவி இரகமாக இருக்கின்றன.அந்த வேடத்தை நன்றாகச் செய்து வரவேற...









