அ.தி.மு.க. சார்பில் ஊடகங்களில் பேச கட்டுப்பாடு – இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
1.சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்)
2. பா.வளர்மதி ( கழக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்)
3. எஸ்.கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்)
4. டாக்டர் வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர்)
5. ஜே.சி.டி.பிரபாகர், (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர்)
6. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டம்)
7. ம.அழகுராஜ் (எ...









