அரசியல் அறிவிப்பால் மீண்டும் பிசியான போயஸ்கார்டன்… அன்று ஜெ., இன்று ரஜினி..!
அரசியல் அறிவிப்பால் மீண்டும் பிசியான போயஸ்கார்டன்... அன்று ஜெ., இன்று ரஜினி
சுமார் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அதிகார மையமாக இருந்து வந்தது போயஸ்கார்டன் பகுதி.
ஜெயலலிதா இருந்த வரையில் பரபரப்பான அரசியல் களமாகவே காணப்பட்டது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்தே பல சாதனைகளை படைத்தார். கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி அ.தி.மு.க.வின் கொள்கை முடிவுகள் அனைத்தையுமே அவர் அங்கு வைத்துதான் முடிவு செய்தார்.
இதனால் அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத நேரத்திலும் சரி போயஸ்கார்டன் பகுதி பரபரப்பு களமாகவே காணப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் இருந்த ஜெயலலிதா வீட்டு முன்பு மட்டுமல்லாமல் அந்த பகுதியே எப்போதுமே பாதுகாப்பு பலமாக இருக்கும்.
எத்தனை பாதுகாப்புகள் இருந்தாலும் காலை முத...









