“தெருக்கூத்து கலைஞர்களுக்கு எந்த பிரஷரும் கொடுக்க கூடாது” – கட்டளை போட்ட இளையராஜா!
“தெருக்கூத்து கலைஞர்களுக்கு எந்த பிரஷரும் கொடுக்க கூடாது” – உத்தரவிட்ட இளையராஜா!
இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் தெருத்கூத்து கலை, அந்த கலைஞர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ஜமா. இதென்ன தலைப்பு. தெருக்கூத்து பின்னணியில் எந்த விஷயத்தை சொல்ல வருகிறீர்கள் என்று இயக்குனரிடம் கேட்டால், ‘‘ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. தெருக்கூத்து பின்னணியில் தமிழில் சில படங்கள் வந்திருந்தாலும் இது புதுவகை கரு. குறிப்பாக, பெண் வேடமிட்டு தெருக்கூத்து ஆடுபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களின் உளவியல், ஆதங்கம், கோபத்தை இந்த கதை சொல்கிறது. நானே பெண் வேடமிட்டு தெருக்கூத்து ஆடும் கல்யாணம் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். பொதுவாக வட மாவட்டங்களில் தெருக்கூத்து நடத்தும் குழுக்களை ஜமா என்று அ...









