நானும் ஒரு குழந்தைதான் என புகைப்பட கண்காட்சியை நடத்துகிறார் இயக்குனர் பா.ரஞ்சித்
இயக்குநர் பா_இரஞ்சித்தின் அடுத்தக்கட்ட நகர்வு.
இயக்குநர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார்.
அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் “நீலம் பண்பாட்டு மையம்” ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்துள்ள “நானும் ஒரு குழந்தை” என்னும் தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்த உள்ளார் பா.இரஞ்சித்.
புகைப்படக் கலைஞர் ம.பழனிகுமாரின் புகைப்...









