காந்தி டாக்ஸ் விமர்சனம் 3.5/5
காந்தி டாக்ஸ் விமர்சனம் 3.5/5
பல பக்க காது கிழிக்கும் வசனங்களை அடுக்கடுக்காக பேசி அதை பார்த்து பழகிய சினிமா ரசிகர்களுக்கு வசனங்களே இல்லாமல் காட்சிகளிலும், எழுத்துக்களிலும் திரைக்கதை நகர்த்த முடியும் என்பதை கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமா காட்சிப்படுத்தி இருக்கிறது.
1987 ஆம் ஆண்டு கமல்,அமலா,பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் பேசும் படம். படத்தின் பேர்தான் பேசும் படம்… ஆனால் அந்த படத்தின் சிறப்பே அது வசனங்கள் இல்லா பேசாத படம் என்பதுதான். ஆம்,அப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் எதுவும் வசனம் பேசாது.
சுமார் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் 79 ஆம் நினைவு நாளில் காந்தி பேசுகிறார் எனும் பொருளில் காந்தி டாக்ஸ் என்ற படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் சிறப்பும் இ...









