நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு தனுஷ் சார் ஒரு முக்கிய காரணம் - கென் கருணாஸ்
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’. பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி.ராம் தயாரித்திருக்கிறார்.
கென் கருணாஸ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், ‘சிறை’ புகழ் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்...
*மிரட்டலான போஸ்டருடன் வெளியான 'காளிதாஸ் 2' ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்!*
2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான 'காளிதாஸ் 2' உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார். 'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நட...
*நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் 'யூத்- Youth ' படத்தின் முன்னோட்டம்*
பாடகர் - இசைக்கலைஞர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும் 'யூத் - Youth' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்TR அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'யூத் - Youth' திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோருடன் நடிகை நளினி சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைப்படத்தில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார். இவர்களுடன் சின்னத் தமிழா - தாஜ் மோலா - கெட்டவன் மணிகண்டன் - சுர...
*'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு*
*'லீடர்' டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி*
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரை...
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் அதிரடி டைட்டில் டீசரை நடிகர் ஆர்யா மற்றும் மாரி செல்வராஜ் வெளியிட்டனர்!
“மனமே அனைத்திற்கும் காரணம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்.” என்று கவுதம புத்தர் சொன்ன பொன்மொழியுடன் Bloody Politics படத்தின் டைட்டில் டீசர் தொடங்குகிறது. தீனா ராகவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், ஒரு வலுவான அரசியல் மனோபாவத்தை உருவாக்குகிறது.
டீசர் மெதுவாக தனது உலகத்திற்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. இதில் மூத்த நடிகர் ஜெயபாலன் நடித்துள்ள முதியவருக்கான கதாபாத்திரத்துக்கும், கதாநாயகனின் குரலுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் முக்கிய அம்சமாக உள்ளது. ஒரு கொடிக்கம்பத்தின் அர்த்தமும் அதன் அரசியல் அடையாளமும் குறித்து அவர்கள் பேசும் இந்த உரையாடல், C. N. அண்ணாதுரை முதல் நடிகர் விஜய் வரை உள்ள அரசியல் குறிப்புகளை நுட்பமாக இணைக்கிறது. இந்தக் காட்சிகள...
*மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்த ‘பெத்தி’ (Peddi) படத்தின் ‘ரை ரை ரா ரா’ அறிமுகப் பாடல் – 46.1 மில்லியன் பார்வைகளுடன் தென்னிந்திய சாதனைகளை தகர்த்தது !*
*‘பெத்தி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் சூப்பர் ஹிட் – 46M+ பார்வைகளுடன் டிரெண்டிங்!*
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடனமாடுவது மட்டும் அல்ல, திரையை முழுவதும் தனது 'ரிதம்' மூலம் ஆளும் தனித்துவமான ஸ்டைல் கொண்டவர். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான பெத்தி படத்தின் முதல் சிங்கிள் ‘சிக்கிரி சிக்கிரி’ வெளியானபோது, அவரது கிரேஸ், பவர், மற்றும் ஆளுமை ஒன்று சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அந்தப் பாடல் உடனே வைரலாகி, அடுத்த பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
நேற்று வெளியான இரண்டாவது சிங்கிள் ‘ரை ரை ரா ரா’ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பாடல் ஐந்து மொழிகளில் சேர்த்து 46.1 மில்லி...
*மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடித்திருக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா*
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
மார்ச் மாதம் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'வடம்' படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனிஸ்காந்த், பால சரவணன், 'ஆடுகளம்'நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு ச...
வடசென்னை லவ் & காமெடி களேபரம் – ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் ட்ரெண்டிங்!
பெரம்பூர் பின்னணியில் பரபரக்கும் காதல் கதை – ‘அன்பே டயானா’டைட்டில் டீசர் வெளியீடு!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் அசத்தலான டைட்டில் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன...