அரசியலுக்கு முன்னோட்டம் – ரஜினிகாந்த் ரசிகர்களை நாளை சந்திக்கிறார்
அரசியலுக்கு முன்னோட்டமாக ரஜினிகாந்த் நாளை முதல் தொடர்ந்து 6 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் பேச இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
கடந்த முறை ரஜினி காந்த் ரசிகர்களை சந்தித்த போது, “நமது அரசியல் சிஸ்டம் சரி இல்லை. போர் வரும் போது களத்தில் இறங்குவேன்” என்று அறிவித்தார்.
எனவே, ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி புதிய அரசியல் கட்சி குறித்து ரஜினி அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அன்றும் அறிவிப்பு வரவில்லை.
இந்த நிலையில், நாளை (26-ந்தேதி) முதல் ரஜினி மீண்டும் ரசிகர்களை 31-ந் தேதி வரை சந்திக்கிறார். இதில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று சொல்லப...








