ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரிதரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலராக உள்ளார் ஹரிதரன். இவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர் ஹரிதரன் என போலீஸ் தகவல் வெளியிட்டு உள்ளனர்.
இன்னொரு பக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. தற்போது விசாரணை முடிந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக தகவல் வெளியாகி உ...









