மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ், இணையும் பான் இந்திய “மட்கா” படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வருண் தேஜ் இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில...









