ப்ரோகோட்’ (BroCode) படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன்
*நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் 'ப்ரோகோட்- (BroCode)'*
*'ப்ரோகோட்' ( BroCode)படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன்*
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ப்ரோகோட்- ( BroCode)' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ' ப்ரோகோட்- (BroCode)' எனும் திரைப்படத்தில் ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். 'போர் தொழில்' படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்...









