லக்கிமேன் ரசிக்க வைக்கிறதா? கோடங்கி பார்வை 3.5/5
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு ரொம்ப லக்கிமேன் என்றால் அது யோகிபாபுதான்… லக்கிமேன் என்ற பெயரிலேயே யோகிபாபு, வீரா, ரேச்சல் ரபேகா, அப்தூல், ஆர் எஸ் சிவாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் இந்த படம் உருவாகியிருக்கிறது..
நினைவு தெரிந்த நாளில் இருந்தே தான் ஒரு அன் – லக்கி ஆசாமி என கருதிக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தான் தொட்ட காரியம் எதுவும் சரிவராது என நினைத்தபடி மனைவி மகனுடன் வாழ்கிறார்.
இப்படியிருந்த யோகிபாபு வாழ்க்கையில் ஒருநாள், சிட்பண்ட் நிறுவனத்தில் கார் பரிசாக கிடைக்கிறது., இந்த கார் தான் தன் வாழ்வில் கிடைத்த முதல் அதிர்ஷ்டமாக நினைக்கிறார்.
மனைவியோ அந்த காரை விற்று, தொழில் தொடங்க சொல்கிறார். ஆனால், யோகிபாபுவிற்கோ அப்படி செய்ய விரும்பாமல்,தனது அதிர்ஷ்டம் இந்த கார் என்று ...
அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட்
அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016-ல் பைனான்ஸ்சியர் முகிந்த்சந்த் போத்ரா குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்குது...
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. 41 நாட்கள் பயணம் செய்த சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதை இஸ்ரோ நேரலை செய்தது.
இதனை பார்த்த ஒட்டு மொத்த இந்தியர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இதன்மூலம் நிலவில் தடம் பதித்த 4வது நாடு என்ற பெருமையை பெற்ற இந்தியா, சூரிய ஒளியே படர்த நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் சொந்தமாக்கியது.
விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தரையிறங்கியதற்கு பிறகு எ...
தொலைவில் இருந்தாலும் பூமி முழுவதும் வெளிச்சம் கொடுக்கும் நிலவை சுற்றி நட்சத்திரங்கள் இருந்தால் சொல்லவா வேண்டும், அந்த இடமே பிரகாசத்தின் உச்சமாக தான் இருக்கும். அப்படி ஒரு நிகழ்வாக மிக சிறப்பாக நடைபெற்றது நடிகரும், தயாரிப்பாளருமான துரை சுதாகரின் மகள் நிலாவின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா.
‘களவாணி’ படம் மூலம் வில்லத்தனத்தில் வித்தியாசத்தை காட்டி பாராட்டு பெற்ற நடிகர் துரை சுதாகர், ‘பட்டத்து அரசன்’ படத்தில் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் சிறிய வேடம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் துரை சுதாகரின் விருந்தோம்பல் பற்றி கோலிவுட்டே வியந்து பேசி வ...