டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால்
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!!
ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்கும் “ஃபால்” இணைய தொடரின் அதிரடியான டிரெய்லர் இன்று வெளியானது. இந்த தமிழ் தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.
சென்னை (நவம்பர் 25, 2022 )
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் எதிரப்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் ஃபால் ‘( Fall ) தொடரின் டிரெய்லரை இன்று வெளியிட்டது. அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த “ஃபால்” தொடர் "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இத்தொடரினை பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் இந்த ‘ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்’ தொடர் டிசம்பர் 9 முதல் ஒளிபரப்பாகும் என அதிக...









