வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை குறிப்பிடுவது கட்டாயம்- தயாரிப்பாளர்களுக்கு சி.பி.எஃப்.சி. அறிவுறுத்தல் !

திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை குறிப்பிடுவது கட்டாயம்- தயாரிப்பாளர்களுக்கு சி.பி.எஃப்.சி. அறிவுறுத்தல் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் (சி.பி.எஃப்.சி) அனைத்து வகையான திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கி வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் (ஏ சர்டிபிகேட்) வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யூஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த திரைப்படங்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடும் போதும், எந்த சான்றிதழ் வகையைச் சேர்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. தயாரிப்பாளர் விரும்பினால் யூ சான்றிதழை விளம்பரங்களில் வெளியிட்டுக் கொள்ளலாம். சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்...
வித்யாசமான டைடிலில் மக்களை ஈர்க்கும் ” வந்திய தேவன் மீது P C R  வழக்கு “!

வித்யாசமான டைடிலில் மக்களை ஈர்க்கும் ” வந்திய தேவன் மீது P C R வழக்கு “!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மரப்பாச்சி ,ஆண்கள் ஜாக்கிரதை ,படங்களை தயாரித்த "ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில், "வந்தியத்தேவன் மீது PCR வழக்கு, "அக்கினிப்பாதை :என இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது. அதில் ," வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு" படத்தை " ஒரு நடிகையின் வாக்குமூலம் " ,படத்தை இயக்கிய ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார் .மற்றொரு படமான அக்னி பாதை, படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் இயக்குகிறார். படத்தின் கதை, வசனத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் எழுதுவதோடு, கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு :அருள். இசை :பாலகணேஷ் . எடிட்டிங் :B.S.வாசு. கலை :ஜனா . மக்கள் தொடர்பு : மணவை புவன். இணை தயாரிப்பு - ஆயர்பாடி கண்ணன் தயாரிப்பு - ஜெம் பிக்சர்ஸ் சார்பில் முருகானந்தம். இயக்கம் - ராஜ் கிருஷ்ணா " வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு " படத்தைப் பற்றி இ...
சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ!

சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இசைப்பதிவில் தொழில் நுட்பங்கள் அடுத்தடுத்த கட்டப் பாய்ச்சல்கள் நிகழ்த்தி வரும் வேளையில், மிக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புத்தம்ரெகார்டிங் ஸ்டுடியோ ஒன்று ‘ஹல்லோ மைக் டெஸ்டிங்’ என்று களம் இறங்கியுள்ளது.. ’சவுண்ட்ஸ் ரைட்’ [sounds right] என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்டுடியோ வள்ளுவர் கோட்டம் அருகே வீரபத்திரன் தெருவில் அமைந்துள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகிய மூவரும் இணைந்து குத்துவிளக்கேற்ற ’சவுண்ட்ஸ் ரைட்’ நேற்று புதனன்று திரையுலக பிரபலங்களின் பூங்கொத்து வாழ்த்துகளால் நிரம்பி வழிந்தது. அந்நிகழ்வில் பிரபல பாடகர்கள் ஸ்ரீநிவாஸ்,ஹரி சரண்,தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், இயக்குநர் ஏ.எல்.விஜய் சூப்பர் சிங்கர்ஸ் பிரபலங்கள் ஷிவாங்கி, சத்ய பிரகாஷ், ஹரிப்ரியா, பிரியங்கா, ஆதித்யா,, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். ’சவுண்ட்ஸ...
பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா !

பிரபல நடிகருடன் இணைந்த ராஷ்மிகா !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா, தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....
கரண் ஜோகர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

கரண் ஜோகர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
பாலிவுட் பிரபலங்களில் ஒருவர் கரண் ஜோகர். 50 வயதான இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர். பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் ஷாருக்கானின் வெற்றிப்படமான 'குச் குச் ஹோத்தா ஹை' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இவர் காபி வித் கரண் என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கரண் ஜோகர் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறி உள்ளார். தனது சமூக வலைதள கணக்கை நீக்கியுள்ள கரண் ஜோக்கர் இது குறித்து தனது கடைசி பதிவு மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "அதிகளவில் பாசிட்டிவ் எனர்ஜியை விரும்புகிறேன். அதன் முதல் படியாக சமூக வலைதளத்தில் இருந்து விலகுகிறேன். குட் பை" என தெரிவித்து உள்ளார். அண்மைக் காலமாக பாலிவுட் சினிமாவுக்கு எதிராக புறக்கணிப்பு முழக்கங்கள் முன்னெடுக்கப்படுவதால் கரண் இவ்...
திரைத்துறையில் கலமிறங்கும் டோனி.. வெளியான தகவல்..!

திரைத்துறையில் கலமிறங்கும் டோனி.. வெளியான தகவல்..!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், விளையாட்டு செய்திகள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல தொழில்களில் பிசியாக இருக்கும் இவர் 'தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதற்கு முன்பு இவரது தயாரிப்பில் 'ரோர் ஆப்தி லையன்' என்ற ஆவண படம் ஹாஸ்டாரில் வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படம் ஒன்றையும் புராணத்தை அடிப்டையாகக் கொண்டு திரில்லர் படம் ஒன்றையும் தோனி பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் தோனி, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் படங்கள் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
மஹிந்திரா பிக்சர்ஸ் production no.1  திரைப்படம்  பிரமாண்டமாக தொடங்கியது!

மஹிந்திரா பிக்சர்ஸ் production no.1  திரைப்படம்  பிரமாண்டமாக தொடங்கியது!

Uncategorized
Gunas entertainment's சாய் கார்த்திக் வழங்கும் மஹிந்திரா பிக்சர்ஸ் (Mahindhra Pictures)பேனரில்  தமிழ் மற்றும் தெலுங்கு  மொழிகளில் வி.ஸ்ரீனிவாச ராவ் தயாரித்துள்ள "புரொடக்‌ஷன் நம்பர்.1" திரைப்படம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. சைதன்யா கதாநாயகனாக , ரித்திகா கதாநாயகியாக நடிக்கிறார்கள்.  இந்த படத்தின் தொடக்க விழா, பூஜை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன், நடிகர் ஆகாஷ் பூரி வருகை தந்தார். முதல் காட்சிக்கு கிளாப் (Clap) அடித்து தொடங்கி வைத்தார் ஹீரோ பூரி ஆகாஷ். பின்னர் படக்குழு ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்.. திரைப்பட இயக்குனர் சின்ன வெங்கடேஷ் பேசுகையில் "அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள். நான் சொன்ன கதை பிடித்ததால் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார் தயாரிப்பாளர் வி.சீனிவாச ராவ். அவர்களுக்கு என் நன்றிகள். ஹீரோ ஆகாஷ் பூரி, தயாரிப...
இயக்குனர் ராம் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன் !

இயக்குனர் ராம் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் இதுவ...
விடுமுறையை கொண்டாட ஒன்றாக மாலத்தீவு சென்ற ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா!

விடுமுறையை கொண்டாட ஒன்றாக மாலத்தீவு சென்ற ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்று போனது. மேலும் சிலருடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார். தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இந்த படம் வசூலை அள்ளியது. கீதா கோவிந்தம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஜோடி டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்தனர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரி தான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. டியர் காம்ரேட் படத்தில் ஜோடியாக நடித்தபோது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த கிசுகி...
கூவம் நதி சீர் செய்யப்பட்டு சென்னை, லண்டனுக்கு இணையாக மாற்றப்படும்- அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி !

கூவம் நதி சீர் செய்யப்பட்டு சென்னை, லண்டனுக்கு இணையாக மாற்றப்படும்- அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளை மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன. அதை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும். கூவம் நதி சென்னை முழுவதும் ஒடும் நதி. மழை காலத்திற்கு பின்னர், கூவம் நதியை சீர் செய்யும் நடவடிக்க...