வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

கோப்ரா படத்தில் ஏழு கெட்டப்புகளில் நடித்த விக்ரம்!

கோப்ரா படத்தில் ஏழு கெட்டப்புகளில் நடித்த விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை உள்பட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை ...
‘வெந்து தணிந்தது காடு’ மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு !

‘வெந்து தணிந்தது காடு’ மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வகையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய 'மறக்குமா நெஞ்சம்' என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. செப்டம்பர் 15-ந்தேதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில்...
ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது ஹாங்காங்!

ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது ஹாங்காங்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஒருநாடு மட்டும் தகுதி சுற்றில் இருந்து நுழையும். இதில் ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகள் பங்கேற்று விளையாடின. சிங்கப்பூர் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்று வாய்ப்பை இழந்தது. நேற்று இரவு நடந்த கடைசி 'லீக்' ஆட்டங்களில் குவைத்-சிங்கப்பூர், ஆங்காங்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. குவைத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி 19.5 ஓவரில் 104 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் குவைத் அணி 7.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தி...
தொடர்ந்து லீக் ஆகும் வாரிசு பட காட்சிகள்!

தொடர்ந்து லீக் ஆகும் வாரிசு பட காட்சிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது, சிலர் அதை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளத்தில் பகிர்ந்தனர். சில தினங்களுக்கு முன்பு வாரிசு படப்பிடிப்பில் விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படம் கசிந்தது. மருத்துவமனையில்...
ஜெய்பீம் படத்தின் மேல் மீண்டும் வழக்கு!

ஜெய்பீம் படத்தின் மேல் மீண்டும் வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான '2 டி' எண்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் படக் குழுவினர் மீது, சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 'ஜெய்பீம்' படம் எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும், அந்த வழக்கின் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை, தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும், காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வரும் 26-ந் தேதிக்குள் வழக்...
கோவை ஜிஆர்டி கல்லூரியில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்

கோவை ஜிஆர்டி கல்லூரியில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்,“கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம்’ என தெரிவித்தார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை, கோவை ...
’Brahmastra’ will take Indian culture to the world, says Rajamouli

’Brahmastra’ will take Indian culture to the world, says Rajamouli

CINI NEWS, HOME SLIDER, MOVIES
Brahmastra’ will take Indian culture to the world, says Rajamouli Stating that a film like 'Brahmastra' will take Indian culture to the world, S.S. Rajamouli of 'RRR' and 'Baahubali' fame said on Wednesday that what he liked the most about Ayan Mukerji's upcoming magnum opus is that it is a commercial way of telling the story of 'astras'. Participating in a pre-release press conference here, the ace director, who is presenting the film, said that 'Brahmastra' is not only one of the most awaited films, but is also one of the costliest productions of the year. "Ayan dreamt about creating a world that we have never seen before -- the magnificent world of astras that we have learnt from our history, our puranas," Rajamouli said. "As children, we heard about these astras but have ne...
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் திருநெல்வேலியில் ஆய்வு!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் திருநெல்வேலியில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் வீட்டு வசதி வாரிய திருநெல்வேலி பிரிவு அலுவலக கட்டடத்தையும் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்புரம் கிராமத்தில் நடைபெறும் திருநெல்வேலி PHASE VII 892 வீட்டு வசதி வாரிய மனை குடியிருப்புகள் மேம்பாட்டு திட்ட பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., மற்றும் திமுக கழக நிர்வாகிகள், திருநெல்வேலி வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட வீட்டு வசதி வாரிய துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.  ...
சினிமாவை விமர்சிப்பவர்கள் தற்குறிகளா? மிஷ்கின் திடீர் விளக்கம்

சினிமாவை விமர்சிப்பவர்கள் தற்குறிகளா? மிஷ்கின் திடீர் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
சினிமாவை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என்றாரா இயக்குனர் மிஷ்கின் என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள், இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன் விமர்சிப்பது அனைவரின் உரிமை, உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன். - மிஷ்கின்...
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு- கல்வித்துறை தகவல் !

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு- கல்வித்துறை தகவல் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டன. வேலையின்றி வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாமல் மாற்று சான்றிதழை பெற்று அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. தற்போது 72 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மழலையர் பள்ளி, துவக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டும் அதிகளவு மாணவர்கள் சேர்ந்தனர். அரசு பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கையை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து நட...