வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

5 நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

5 நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (23-ந்தேதி) தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். 24, 25, 26 ஆகிய தேதிகளில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லே...
வெப்சீரியஸில் தனக்கென தனி முத்திரை பதித்த தமிழ்ராக்கர்ஸ்

வெப்சீரியஸில் தனக்கென தனி முத்திரை பதித்த தமிழ்ராக்கர்ஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் சொல்ல முடியாத கதைகளையும்,  காட்ட முடியாத காட்சிகளையும் மிக வெளிப்படையாக பிரதிபலிக்கும் ஒரு இடமாக மாறியுள்ளதுதான் வெப் சீரியஸ். இந்திய மொழிகளில் இந்தியில் மிகசுதந்திரமாக உலா வந்த காமம், காதல், ஆக்ரோஷம், கொலை, ஆபாசங்கள் அனைத்தும் இப்போது தமிழையும் ஆக்ரமித்துள்ளது. சம்பத்தில் ஒரு வெப் சீரியஸ் பார்த்தேன் . அதை அப்படி சொல்வதற்கு பதில் “நீலப் படத்தை” கொஞ்சம் ஆடைகளோடு பார்த்தேன் என சொல்லலாம். ஆனால் இந்த  "தமிழ்ராக்கர்ஸ்"  வெப் சீரியஸ் கொஞ்சம் புதுசாய் ஒரு தினுசாய் இருக்கிறது . வெப் சீரிஸ் என்றால் முழு படைப்பு சுதந்திரம் என்று நினைத்துகொண்டு அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தை பேசுவது, பாலியல் காட்சிகளை திணிப்பது, ரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிகளை ஓட விடுவது, சம்மந்தமே இல்லாமல் அலற விடுவது என்றில்லாமல்  பார்க்கிற அனைவரையும் அடுத்த எபிசோடு என்ன என்று ஒரு ஆவலை தூண்...
மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் நடிப்பில் இரு மொழிகளில் உருவாகியுள்ள “அர்த்தம்”

மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் நடிப்பில் இரு மொழிகளில் உருவாகியுள்ள “அர்த்தம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது… நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் தமிழ் படம். கடந்த லாக்டவுன் சமயத்தில் தான் இந்தப்படத்தை துவக்கினோம். இரண்டு மொழிகளில் எடுக்க திட்டமிட்டு மகேந்திரனை நாயகனாக்கினோம், அவர் சென்னை படப்பிடிப்பிற்கு மிக உதவியாக இருந்தார். இந்தப்படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி. ...
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை!

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய தரப்பில் ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். தீபக் ஹூடா 25 ரன்கள் அடித்தார். அதிபட்சமாக சஞ்சு சாம்சன் 43 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது தனது அறிமுக போட்டியில் இருந்து நேற்றைய போட்டிவரை அவர் இந்தியாவுக்காக மொத்தம் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து போட...
சென்னை நீர்நிலைகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை- அமைச்சர் தகவல் !

சென்னை நீர்நிலைகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை- அமைச்சர் தகவல் !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னை தினம் கொண்டாட்டத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர் அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை மேயராக இருந்தபோதுதான் சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன துரிதப்படுத்தப்பட்டன. பிற மாநிலத்தவரும் வியக்கும் வகையில் சென்னையில் அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதிகள் மற்றும் பல்வேறு திட்டப் ப...
‘ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இந்த வாரம் அண்ணா நகரில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. 9 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேட்மிட்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மக்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள...
கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தில் டாப்சி!

கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தில் டாப்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1980 மற்றும் 90-களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் சுமிதா. இவரது கால்ஷீட்டுகாக தயாரிப்பாளர்கள் காத்து கிடந்த காலம் இருந்தது. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே 1996-ல் தற்கொலை செய்து கொண்டு பட உலகை அதிர வைத்தார். சில்க் சுமிதாவின் வாழ்க்கை 2011-ல் மிலன் இயக்கத்தில் இந்தியில் 'த டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தற்போது சில்க் சுமிதா வாழ்க்கை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. முதல் பாகத்தை எடுத்த பிரபல இந்தி பட அதிபர் ஏக்தா கபூர் 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். 2-ம் பாகத்தில் சில்க் சுமிதாவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள் இடம்பெறுவ...
தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை !

தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்நிலையில், அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கனிஷ்கா சோனி. குறிப்பாக இவர் நடித்த தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியல் தமிழில் என் கணவன் என் தோழன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நடிகை கனிஷ்கா தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் வீடியோ வெளியிட்ட அவர் தான் சுயநினைவோடு தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்த...
முறைகேடான பத்திர பதிவால் ரூ.165 கோடி இழப்பு- லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை நடத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை !

முறைகேடான பத்திர பதிவால் ரூ.165 கோடி இழப்பு- லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை நடத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெயிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத்துறையின் நம்பகத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது. தனியார் நிறுவனத்திடமுள்ள 73 ஏக்கர் நிலத்தின் சிறுபகுதியை (117.5 செண்ட்) கூடுதல் விலைக்கு பதிவு செய்வதன் மூலம், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். சமயத்தில் எஞ்சியுள்ள பெரும்பாலான நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு பெறுவதற்காகவே இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. சர்வே எண்கள் குறிப்பிடாமல் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் குறிப்பிட்டு இந்த நிலத்தைப் பதிவுசெய...
முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 3ம் தேதி கேரளா பயணம்!

முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 3ம் தேதி கேரளா பயணம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் ஆகியவை கொண்டது தென் மண்டல கவுன்சில். இதற்கிடையே, திருவனந்தபுரத்தில் அடுத்த மாதம் 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் 3-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்....