வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த பிரபல நடிகை !

தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த பிரபல நடிகை !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'லால் சிங் சத்தா'. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் 'லால் சிங் சத்தா' படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர் ஒருகட்டத்தில், 'உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்? எங்கள் படங்களை பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் மோசமாகி விடப்போவது கிடையாது' என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் தரப்பிலும் பல விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து படத்தை புறக்கணிக்க போவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கரீனா கபூர் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில...
வைரலாகும் ‘1947- ஆகஸ்ட் 16’ பட டீசர்!

வைரலாகும் ‘1947- ஆகஸ்ட் 16’ பட டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பதித்துக்கொண்டார். விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இதற்கிடையில் 'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் முருகதாஸ் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'மான் கராத்தே', 'ரங்கூன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் '1947- ஆகஸ்ட் 16'. இப்படத்தை ஏ.ஆர்.முருக...
பிளஸ் 2-தேர்வு எழுத ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்!

பிளஸ் 2-தேர்வு எழுத ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரள மாநிலத்தில் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயதான சிமி மோள் என்ற பெண்ணும் பிளஸ் 2-வுக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14-ந் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. தேர்வுக்கு சில நாட்களே இருந்த நிலையில் சிமி மோளுக்கு கடுமையான மூச்சு திணறல் நோய் ஏற்பட்டது. இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றாலும் அவர் பிளஸ் 2-தேர்வை எழுதியே தீருவேன் என உறவினர்களிடம் கூறினார். இதையடுத்து அவரது உறவினர்கள் கடந்த ஞாயிற்றுகிழமை, சிமிமோளை, ஆக்சிஜன் உதவியுடன் தேர்வு அறைக்கு அழைத்து சென்றனர். அவரது நிலைமையை பார்த்த தேர்வு அதிகாரிகள், சிமி மோள் தேர்வு எழுத தனி அறை ஒதுக்கி கொடுத்தனர்....
காமெடியன் என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன் – தேசிய கொடி ஏற்றிய விடுதலை ஹீரோ சூரியின் ஓப்பன் டாக்!

காமெடியன் என்பதே எனது அடையாளம் அதை எக்காலத்திலும் விடமாட்டேன் – தேசிய கொடி ஏற்றிய விடுதலை ஹீரோ சூரியின் ஓப்பன் டாக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
  75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக கொடியேற்றி உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக நடிகர்  சூரி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் சார்பாக கொடி ஏற்றி விழாவை சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர்  சூரிக்கு சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது. நடிகர் சூரி  பேசுகையில், நடிகர் சூரி  பேசகையில், அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் என்னை விழாவிற்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக தலைவி கவிதா அவர்கள் அழைத்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிற...
இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’

இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் 'தடை உடை'* *விரைவில் நிறைவடையவிருக்கும் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ படபிடிப்பு* சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான 'தடை உடை' எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்...
சலார் படத்தின் அப்டேட்!

சலார் படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தின் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது. இந்த நிலையில் சலார் படத்தின் அப்டேட் குறித்த தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பகல் 12.58 மணிக்கு சலார் படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது....
சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது.. தமன்னா ஆதங்கம்!

சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது.. தமன்னா ஆதங்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. சிம்ரனுக்கு அடுத்து இடையழகி என்று தமன்னா ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர். தமிழ் பட உலகின் தங்க நிறத்தழகிகளில் ஒருவரான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட பார்க்க மாட்டார்கள். கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது. இந்த போக்கு சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது" என்று குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், ''கதாநாயகிகளின் புகைப்படம் பட 'போஸ்டர்'களில் வருவதே பெரிய விஷயம். பட விழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள். அதேவேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்ட...
மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ண கொடியையையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தை மலிவுபடுத்தி இருக்கின்றனர். அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், தேசிய கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இது தமிழ்நாடு இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். தாங்கள்தான் தேசப்பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைகாரர்கள் என நினைத்து வரம்...
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்!

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், ...
விருமன் வசூலில் வேகமெடுப்பானா? படுத்துக் கொள்வானா? – கோடங்கி விமர்சனம்

விருமன் வசூலில் வேகமெடுப்பானா? படுத்துக் கொள்வானா? – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பழைய கிராமத்து உறவுகளின் கதைதான்… என்ன கொஞ்சம் கமர்சியல், காதல் கலாட்டா அடிதடிஆக்‌ஷன் மசாலா கலந்து கார்த்திக்காகவே எடுக்கப்பட்ட விருமன்.   சரி கதைக்கு வருவோம்… முனியாண்டி கேரக்டரில் வரும் பிரகாஷ்ராஜ்-சரண்யாபொன்வண்ணன் தம்பதிக்கு விருமன் கேரக்டரில் வரும் ஹீரோ கார்த்தி உள்ளிட்ட 4 பிள்ளைகள். முனியாண்டி மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தனாம தொடர்பு வைத்ததை பார்த்த முனியான்டி மனைவி தீக்குளித்து சாகிறார். கண்முன் தாய் தீயில் கருகுவதை கண்டு தந்தை பிரகாஷ்ராஜ் மீது கடும் ஆத்திரம் கொள்ளும் விருமன் அவரை கொல்ல முயலும் நிலையில் தாய்மாமன் பேச்சை கேட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு அவர் வீட்டிலேயே வளர்கிறார். ஆனாலும் தந்தைக்கும் மகனுக்கு இடையே மோதல் ஓயவில்லை. எப்படியாவது விருமனை ஒழித்துக்கட்ட பிரகாஷ்ராஜ் முயல்கிறார். இதற்கிடையில் பிரகாஷ்ராஜின் மற்ற 3 மகன்களும் ஒரு கட்டத்தில் ஒவ்வொரு...