தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது !
தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாத இறுதியில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.38,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்கப்பட்டது.
கடந்த 4-ந்தேதி தங்கம் விலை திடீரென்று ரூ.38,920 ஆக அதிகரித்தது. 5-ந்தேதி சற்றே குறைந்து ரூ.38,760-க்கு விற்பனையானது.
மறுநாளும் அதேவிலையில் நீடிக்கிறது. நேற்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,800 ஆக உயர்ந்தது.
இதையும் படியுங்கள்: கும்மிடிப்பூண்டி அருகே திருட முயன்ற கொள்ளையனை அடித்து கொன்ற கிராம மக்கள் இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது.
தங்கம் இன்று பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.39,040-க்கு விற்கப்பட...









