வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

கமலுடன் இணையும் பிரபல நடிகை!

கமலுடன் இணையும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கமல்ஹாசனின் விக்ரம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்த நிலையில் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் விபத்து, கொரோனா போன்ற காரணங்களால் பல வருடங்களாக முடங்கி இருந்தது. இதையடுத்து படத்தை கைவிட்டு விட்டதாக இணையதளங்களில் பரவிய தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்தனர். தற்போது படத்தின் இயக்குனர் ஷங்கர், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்து விட்டு இந்தியன்-2 படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்த காஜல் அகர்வால் படத்தில் இருந்து விலகி விட்டார். எனவே அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட முடிவு செய்து உள்ளனர். காஜல் அகர்வாலுக்கு பதிலாக கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக த...
1/2 கி.மீ.நீளத்துக்கு  தி.நகரில் பயணிகள் நடை மேம்பாலம் !

1/2 கி.மீ.நீளத்துக்கு தி.நகரில் பயணிகள் நடை மேம்பாலம் !

HOME SLIDER, NEWS, செய்திகள்
தி.நகர் ரெயில் நிலையம் - பஸ் நிலையம் இணைக்கும் வகையில் பயணிகள் நடை மேம்பால பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் மிகப்பெரிய வர்த்தக மையமாக தி.நகர் உள்ளது.இங்கு ஜவுளி, நகை,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மாம்பலம் ரெயில் நிலையம் வழியாக தினமும் பல லட்சம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு உள்ள ரெங்கநாதன் தெரு,மேட்லி சாலை,உஸ்மான் ரோடு மார்க்கெட் தெரு என அனைத்திலும் திருவிழா கூட்டம் போல் மக்கள் தினமும் அலைமோதி வருகின்றார்கள். புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தி.நகருக்கு ஏராளமானோர் வருகின்றனர். இந்த நிலையில் பயணிகள், பொதுமக்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல வசதியாக மாநகராட்சி புதிய திட்டம் தீட்டியது. இதற்காக தி.நகர் ரெயில்நிலையம்-பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் 1/2 கி.மீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட பயணிகள் நடை மேம்பாலம் ரூ. 30 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட...
தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கும் அ.தி.மு.க. அணிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை கைப்பற்ற தீவிரமாக களம் இறங்கினார்கள். 66 எம்.எல்.ஏ.க்களில் 63 பேரின் ஆதரவையும், மொத்தம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆதரவை தக்க வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளரானார். இதுபற்றி தகவலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது பற்றியும் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். பெரும்பான்மை ஆதரவு இருப்பது பற்றியும் உரிய ஆவணங்களுடன் புகார் கொடுத்துள்ளார். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அந்த பொதுக்குழுவே செல்லாது. கட்சியின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதையும் சுட்டி காட்டி இருக்கிறார்கள். இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் பரிசீலித்...
விஜயானந்த்’ படத்தை தமிழில் வெளியிடுவது பெருமிதமாக உள்ளது’-நெகிழும் கன்னட தயாரிப்பாளர்

விஜயானந்த்’ படத்தை தமிழில் வெளியிடுவது பெருமிதமாக உள்ளது’-நெகிழும் கன்னட தயாரிப்பாளர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *’விஜயானந்த்’ படத்தை தமிழில் வெளியிடுவது பெருமிதமாக உள்ளது’-நெகிழும் கன்னட தயாரிப்பாளர்* இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர். டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது "விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்". என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் ‘விஜயானந்த்’. இது குறித்துப் பேசிய அவர்,” எங்கள் தயாரிப்பு நிறுவனம் ’விஜயானந்த்’ என்ற முதல் திரைப்பட முயற்சியை அறிவிப்பதில்...
ரசிகர்கள் முன்னிலையில் கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்படுகின்றன!

ரசிகர்கள் முன்னிலையில் கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்படுகின்றன!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரசிகர்கள் முன்னிலையில் கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்படுகின்றன. 2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னில...
குலு குலு” சந்தானம் படமே இல்ல – கோடங்கி விமர்சனம்

குலு குலு” சந்தானம் படமே இல்ல – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  "குலு குலு" சந்தானம் படமே இல்ல - கோடங்கி விமர்சனம்   நடிகர்கள் : சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன். ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன் இசை – சந்தோஷ் நாராயணன் எடிட்டிங்: பிலோமின் ராஜ் தயாரிப்பு: – சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ்.ராஜ் நாராயணன் இயக்கம் – ரத்னகுமார் வெளியீடு – ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிஆர்ஒ : யுவராஜ்; நக்கல், நையாண்டி, குசும்பு கும்மாளம் போட்டு காமெடி மட்டுமே செய்து வந்த சந்தானம் காமெடி வாலை சுருட்டி கக்கத்தில் வைத்து அமுக்கிக் கொண்டு... அது வெளியில் தெரியாதபடி குணச்சித்திர வேடம் என்னும் பல வர்ண அங்கியை மாட்டிக் கொண்டு வலம் வந்திருக்கும் படம்தான் குலுகுலு... இதில் சந்தானம் பேர் கூகுள்... இந்த கூகுளை சுத்தித்தான் முழுபடமும் நகர்கிறது... சில இடங்களில் நகர மறுத்து நிற்...
“பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு !

“பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
லைகா புரடக்சன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் சிங்கிள் பாடல் “பொன்னி நதி” வெளியீடு ! லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், தமிழ் திரைவரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வருகிறது, பொன்னியின் செல்வன் திரைப்படம். தமிழ் திரையுலகம் இது வரை கண்டிராத வகையில் பெரும் நடசத்திர கூட்டணியில் பிரமாண்ட படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் “பொன்னி நதி” இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று பிரமாண்ட விழாவில், எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில், ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர் கார்த்தி பேசியதாவது.., இங்கு இந்த இடத்தில் ரசிகர்களுடன் இந்த பாடலை வெளியிடுவது எங்களுக்கு மக...
விண்ணை நோக்கிப்பாயும் ராக்கெட் வேகத்தை விட இந்த பேப்பர் ராக்கெட் குறை சொல்ல முடியாத படி சீறிப்பாய்கிறது

விண்ணை நோக்கிப்பாயும் ராக்கெட் வேகத்தை விட இந்த பேப்பர் ராக்கெட் குறை சொல்ல முடியாத படி சீறிப்பாய்கிறது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர்கள் : காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், கெளரி கிஷன், நிர்மல் பாலாழி, காளி வெங்கட், சின்னி ஜெயந்த், நாகிநீடு இசை : சைமன் கே.கிங், தரண்குமார், வேத்சங்கர் ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம்.நாதன் தயாரிப்பு : ஸ்ரீநிதி சாகர் இயக்கம் : கிருத்திகா உதயநிதி சினிமாவுக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்ள  வேண்டிய தர்மசங்கடங்களை தவிர்த்துவிட்டு சுதந்திரமாக கதை சொல்ல வேண்டுமென்றால் ஓடிடி தளம் தான் அதற்கு சரியான வழி. அந்த வழியை பின்பற்றி வந்துள்ள வெப் சீரியல்தான் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த ‘பேப்பர் ராக்கெட்’.. அப்பாவின் திடீர் இழப்பைத் தாங்க முடியாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழ...
“பொன்னியின் செல்வன்’ படம் சந்திரலேகா போல் பிரமாண்டமாக உருவாவதற்கு முக்கிய காரணம் சுபாஸ்கரன் சார் தான் – ஜெயம் ரவி

“பொன்னியின் செல்வன்’ படம் சந்திரலேகா போல் பிரமாண்டமாக உருவாவதற்கு முக்கிய காரணம் சுபாஸ்கரன் சார் தான் – ஜெயம் ரவி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பொன்னியின் செல்வன் புத்தகத்தை திரைப்படமாக எடுப்பதற்கு பல ஜாம்பவான்கள் முயற்சித்தும் சாத்தியமாக்கி இருப்பது மணி சார்..” - ஜெயம் ரவி நடிகர் ஜெயம் ரவி பேசியபோது, உங்கள் அனைவரின் அன்பிற்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், நான், கார்த்தி, ஜெயராம் சார் மூவரும் சேர்ந்து நடிக்கும் போது மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? மக்களின் ஆரவாரம் எப்படி இருக்கும்? மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டு தான் நடித்தோம். ஆனால், இன்று சில காட்சிகளுக்கு நீங்கள் தந்த எதிர்வினைகள் ஒன்றே போதும். மிகவும் சந்தோஷமாக உள்ளேன். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளனர். நான் மிகவும் மதிப்பது தமிழ் ரசிகர்களை தான். ஏனென்றால், உலக சினிமா பார்க்கும் ரசிகர்களை நான் கடந்து வந்துள்ளேன். அவர்கள் அனைவரும் நல்ல படத்திற்கு, நல்ல இயக்கத்திற்கு, நல்ல இசைக்கு என்று தனி ...
“பொன்னியின் செல்வன் – இதன் மாபெரும் எதிர்பார்ப்பு இதற்குமுன் எந்த படத்திற்கும் இருந்திருக்காது..” – நடிகர் ஜெயராம்.

“பொன்னியின் செல்வன் – இதன் மாபெரும் எதிர்பார்ப்பு இதற்குமுன் எந்த படத்திற்கும் இருந்திருக்காது..” – நடிகர் ஜெயராம்.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பில், சுபாஷ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் -1” படத்தின் ‘பொன்னி நதி’ என்று தொடங்கும் பாடலை சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிட்டு விழா இன்று நடந்தது. டிப்ஸ் ஆடியோ கம்பெனி இப்பாடலை வெளியிட்டார்கள். அதில், நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி மற்றும் ஜெயராம் பேசினார்கள். நடிகர் ஜெயராம் பேசும்போது.. அனைவருக்கும் வணக்கம். இதுமாதிரி அற்புதமான படத்தில் ஒரு சிறிய பகுதியாக பொன்னியின் செல்வன்-1 மற்றும் பொன்னியின் செல்வன் - 2 இரண்டிலும் நடித்ததில் மிகவும் பெருமை. அதற்கு லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி. பொன்னியின் செல்வன் என்பது ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் ஆழமாக எழுதப்பட்ட திரைக்கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆகையால், இதுபோன்ற மாபெரும் எதிர்பார்ப்பு இதற்...