வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

சென்னை அண்ணாசாலையில் பெரியார் சிலையை சுற்றி பூங்கா அமைப்புபணி தீவிரம்!

சென்னை அண்ணாசாலையில் பெரியார் சிலையை சுற்றி பூங்கா அமைப்புபணி தீவிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையை சுற்றிலும் அழகிய பூங்கா- ரவுண்டானா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை அண்ணாசாலையில் சிம்சன் அருகே பிரமாண்டமான பெரியார் சிலை அமைந்துள்ளது. சாலையின் நடுவில் மிகப்பெரிய பீடத்தில் பெரியார் அமர்ந்து கையை நீட்டி அறிவுரை வழங்குவது போன்ற கம்பீர தோற்றத்தில் இந்த சிலை தத்ரூபமாக உள்ளது. இந்த சிலையை அண்ணாசாலையில் வாகனங்களில் செல்லும் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்லுவார்கள். இந்த பெரியார் சிலையை கோவிந்தசாமி என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.பெரியாரின் 96-வது பிறந்த நாளில் இந்த சிலையை 1974-ம் ஆண்டில் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாள், மற்றும் நினைவு நாளின் போது இந்த சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இதனால் அப்பக...

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீதா ராமம்: எனும் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டிருக்கிறார். மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தானா அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சா...
ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் !

ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஈரோடு மாவட்டம் தாளவாடி ஓசூர் மலை கிராமத்தில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்கம் முகாம் மற்றும் இருவாரகால தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாளவாடியில் நேரடி கள ஆய்வு தொழுநோய் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களின் வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது. மேலும் தொழுநோ...
வைரலாகும் ‘தி லெஜண்ட்’ பட  புதிய பாடல்!

வைரலாகும் ‘தி லெஜண்ட்’ பட புதிய பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள போ..போ.. என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் கே.கே பிரசாத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது. https://youtu.be/F3QNDkE2h0Y...
இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா!

இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். அதன்பின் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று கதையம்சம் கொண்ட படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில், இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

எதிர்க்கட்சி துணைத்தலைவராக நத்தம் விசுவநாதன் தேர்வு?- சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்புகிறார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக சட்டசபையில் 66 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றிய பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. ஒற்றை தலைமையை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த கட்சியின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில் ஓ.பன்னீர...
தொடர்ந்து 22 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்புவை மிஞ்சிய ஹன்சிகா “மஹா” அதிரடி!

தொடர்ந்து 22 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்புவை மிஞ்சிய ஹன்சிகா “மஹா” அதிரடி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்புவை மிஞ்சிய ஹன்சிகா “மஹா” அதிரடி!   ஹன்சிகாவின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள மஹாவில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றமாக இருந்தாலும் படத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரும் சிம்புவின் அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும், அதிரடி வசனங்களும் ரசிகர்களை நிச்சயம் கவருமாம்.   மாநாடு’ வெற்றியை தொடர்ந்து சிம்புக்கு மற்றொரு மாபெரும் வெற்றியை கொடுக்க இருக்கும் ‘மஹா’ திரைப்படம் ஹன்சிகாவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்காக மிக கடுமையாக உழைத்திருக்கும் ஹன்சிகா, பல ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்புவைப் போல அதிரடியை காட்டியிருக்கிறாராம். குறிப்பாக இப்படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்காக ஹன்சிகா தொடர்ந்து 22 மணி நேரம் பணியாற்றி படக்குழுவினரை வியக்க வைத்துள்ளார். காரணம் இந்த ...
கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  ரூ.1½ கோடி நன்கொடை !

கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ரூ.1½ கோடி நன்கொடை !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கூட்டம் மாங்காட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் நிர்வாகிகள் அனைவரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறும்போது, "கட்சியில் நான் செய்யாத எதையும் உங்களை செய்ய அறிவுறுத்த மாட்டேன். அந்த வகையில் எனது வருமானத்தில் இருந்து கட்சிக்காக ரூ.1½ கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்" என்று தெரிவித்தார். இதனை கட்சி நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹான் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள். அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். 100 ரூபாய் சம்பாதிக்கும் நபராக ...
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் இவர் இந்த ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார். 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்ல பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் இன்று அறிவித்துள்ளார். நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அவர் கூறியுள்ளார். தனது ஓய்வு முடிவு குறித்து அவர் கூறுகையில்:- நாளை டர்ஹாமில் நடக்கும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக எனது கடைசி ஆட்டத்தை விளையாடுகிறேன். இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத கடினமான முடிவாகும். இங்கிலாந்துக்காக எனது நண்பர்களுடன் விள...
அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் !

அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், ஓ.பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என ஓ. பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ், வைரமுத்து சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக உத்தரவு எதுவும் மனு எதுவும் தாக்கல் செய்யப்பட்டால் தங்கள் தரப்பு...