ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 5
Shadow

அரசியல்

சிஎன்இராமமூர்த்தி எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார்!

சிஎன்இராமமூர்த்தி எழுதிய “வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்” என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார்!

HOME SLIDER, NEWS, Photos, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  #வன்னியஇனத்திற்கானசமூகநீதியும்திராவிடமுன்னேற்றக்கழகமும்" #வன்னியர்  கூட்டமைப்பு மற்றும் #அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவன தலைவர் #சிஎன்இராமமூர்த்தி அவர்கள் எழுதிய "வன்னிய இனத்துக்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்" என்ற வரலாற்று ஆவண புத்தகத்தை மாண்புமிகு தமிழ்நாடு #முதல்வர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகமான வன்னிய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்னென்ன நன்மைகள் செய்துள்ளது, எப்போதெல்லாம் செய்துள்ளது என்பதையும், அதற்கு வன்னியர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி என்னவெல்லாம் முயற்சிகள் எடுத்தார் என்பதையும் ஆதாரப்பூர்வமாக ஆவணங்களுடன் "வன்னிய இனத்திற்கான சமூக நீதியும், திராவிட முன்னேற்றக் கழகமும்" என்ற தலைப்பில் ஒரு வரலாற்று ஆவண நூலை சி.என்.இராமமூர்த்தி எழுதி இரு...
மாணவர் சிறப்பு பஸ்கள் 10 நாளில் இயக்கப்படும்- கவர்னர் தமிழிசை தகவல்!

மாணவர் சிறப்பு பஸ்கள் 10 நாளில் இயக்கப்படும்- கவர்னர் தமிழிசை தகவல்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். இன்று 5 பள்ளிக்கு செல்கிறேன். மாணவர்களோடு மதிய உணவு அருந்துகிறேன். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். கல்வித்துறை, சுகாதாரத்துறை நவீனமயமாக மாற்றப்பட வேண்டும். இதற்காக முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். காரைக்காலில் வாந்தி பேதியால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் வருகை ஏற்பாடுகளை செய்ய சென்றதால் என்னால் காரைக்கால் செல்ல முடியவில்லை. இருப்பினும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். வ...
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக புதன்கிழமை விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு!

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக புதன்கிழமை விசாரணை- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த மாதம் 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. ஆனால் 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவை மீறி நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில் ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வ...
இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சி அடைந்துள்ளன- பிரதமர் மோடி!

இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சி அடைந்துள்ளன- பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: சர்தார் படேல் ஒருங்கிணைந்த இந்தியாவின் அடித்தளத்தை அமைத்ததாகவும், இப்போது அதை மேலும் முன்னெடுத்துச் செல்வது பாஜகவின் பொறுப்பு என்றும், பிரதமர் மோடி தெரிவித்தார். வம்ச அரசியல்,வாரிசு அரசியல் கட்சிகளால் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்றும், இதுபோன்ற கட்சிகள் நீண்ட காலம் நீடிப்பது கடினம் என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது இறுதி வீழ்ச்சியில் உள்ளன; அவர்களை கேலி செய்யாமல் அவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்....
ராகுல் நர்வேகர்  இளம் வயது சபாநாயகர் என்ற பெருமையை பெற்றார்!

ராகுல் நர்வேகர் இளம் வயது சபாநாயகர் என்ற பெருமையை பெற்றார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. -முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர். வாக்கெடுப்பில் நர்வேகருக்கு ஆதரவாக 164 வாக்குகளும், சால்விக்கு ஆதரவாக 107 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து புதிய சபாநாயகராக ராகுல் நர்வேக்கர் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், நர்வேக்கரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது பேசிய பட்னாவிஸ், ராகுல் நர்வேகர் மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் இளம் வயது சபாநாயகராக உள்ளார் என தெரிவித்தார். 45 வயதான நார்வேக்கரின் முதலில் தேசியவா...
சென்னையில் 4ம் தேதி தொழில் முதலீட்டாளர் மாநாடு!

சென்னையில் 4ம் தேதி தொழில் முதலீட்டாளர் மாநாடு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை தாஜ் ஓட்டலில் வரும் 4ஆம் தேதி தொழில் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும். இந்த மாநாட்டின் மூலம் ₨.3,494 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நான் முதல்வன் திட்டத்தால் இளைஞர்களுக்கு திறன்மேம்பாடு வழங்கப்படுகிறது கடந்த ஓராண்டு காலத்தில் தொழில்துறையில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 29 திட்டங்களுக்கு நிலம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துள்ளது. 25 திட்டங்கள் அனுமதி பெறும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்....
150 அடி உயர ராட்சத கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!

150 அடி உயர ராட்சத கம்பத்தில் பறந்த தேசியக்கொடி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் டெல்லி மற்றும் கார்கில் போர் நடந்த இடத்தில் இருப்பது போல் கன்னியாகுமரியிலும் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் விஜயகுமார் எம்.பி. வலியுறுத்தி வந்தார். அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கன்னியாகுமரியில் ராட்சத தேசியக்கொடி கம்பம் அமைப்பதற்கு விஜயகுமார் எம்.பி. தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மகாதானபுரம் நான்கு வழி சாலையில் அமைந்துள்ள ரவுண்டனா சந்திப்பில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசியக் கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் பறக்க விடப்பட்டுள்ள தேசியக்கொடியின் அளவு 32 அடி அகலமும் 48 அடி...
வாக்குறுதி அளித்தபடி காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- விஜயகாந்த்!

வாக்குறுதி அளித்தபடி காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- விஜயகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. 2013, 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப்பணிக்காக காத்து கிடக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்ததாகவும், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளதை கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணி, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இ...
அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம்!

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. கன்னியாகுமரியில் நடைபெற்ற போராட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இது தொடர்பாக விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:- இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்க செய்து, இந்திய ராணுவத்தின் தரத்தை கேள்வி குறியாக்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அழைப்பை ஏற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இன்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்த புதிய திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினோம். ...
ஓபிஎஸ்.. வளர்ச்சியும்,. வீழ்ச்சியும்!

ஓபிஎஸ்.. வளர்ச்சியும்,. வீழ்ச்சியும்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  *ஓபிஎஸ்.. வளர்ச்சியும்,. வீழ்ச்சியும்*,.. 1969ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர் 1973ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய போது ஓ.பி.எஸ் தன்னை அதில் இணைத்துக் கொண்டார்.பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் தனது நீண்டகால அரசியல் செயல்பாட்டின் வழியாக 1996ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இருந்ததால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படைய...