புதன்கிழமை, அக்டோபர் 7
Shadow

அரசியல்

ஏப்ரல் 1ம்தேதி முதல் இனி 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடிதான் – தமிழக மாடலை பின்பற்ற நிதின் கட்கரி திட்டம்!

ஏப்ரல் 1ம்தேதி முதல் இனி 60 கி.மீ தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடிதான் – தமிழக மாடலை பின்பற்ற நிதின் கட்கரி திட்டம்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
    ஏப்ரல் 1-ம் தேதி நிதிஆண்டு தொடங்கவுள்ள நிலையில் மக்களவையில் சாலைகள் மறும் நெடுஞ்சாலைத்துறைக்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது குறித்து மக்களவையில் விவாதத்தின்போது நிதின் கட்கரி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ‘டெல்லி - அம்ரிஸ்டர் - கத்ரா விரைவுச் சாலை தயாராகிக்கொண்டுள்ளது. டெல்லி - அம்ரிஸ்டர் இடையிலான சாலைப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும். இந்தத் தூரத்தை நான்கு மணி நேரத்தில் சென்றடைவதுபோல இருக்கும். அதேபோல, டெல்லி - ஜெய்பூர், டெல்லி - மும்பை, டெல்லி - டேராடூன் விரைவுச் சாலைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும். ஜெய்ப்பூர், டேராடூன் சாலைகளின் பயண நேர இரண்டு மணி நேரமாக இருக்கும். அதேநேரத்தில் டெல்லி - மும்பை இடையிலான பயண தூரம் 12 மணி நேரமாக இருக்கும். ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையின் 11,650 அடி உயர ஷோஜி லா நெடுஞ்சாலையின் கீழ் அமையும் சுரங்க...
இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

இன்று காலை தேனாம்பேட்டையில முதல்வர் திடீர் ஆய்வு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் நகரில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மழைநீர் வடிகால் வசதிகள் இருந்தும் தண்ணீர் வடியாததால் பல இடங்களில் 4 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மழைநீர் தேங்கிய பகுதிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வேப்பேரி, புளியந்தோப்பு, பெரம்பூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் நடைபெற்ற பணிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து இன்று தேனாம்பேட்டை பகுதி...
உள்கட்சி பூசலால் ஆட்சி அமைக்க திணறும் பாஜக! கமென்ட் அடித்த கெஜ்ரிவால்!!

உள்கட்சி பூசலால் ஆட்சி அமைக்க திணறும் பாஜக! கமென்ட் அடித்த கெஜ்ரிவால்!!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  உள்கட்சி பூசலால் ஆட்சி அமைக்க பாஜக திணறிக் கொண்டிருக்கிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கமென்ட் அடித்திருக்கிறார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  அதில் பஞ்சாப்பில் காங்கிரஸ் மற்றும் பாஜகவை வீழ்த்திய ஆம் ஆத்மி  அங்கு ஆட்சி அமைத்தது. இந்நிலையில், அங்குள்ள மொஹாலியில் இன்று அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் இருந்து காணொளி மூலம் கெஜ்ரிவால் எம்எல்ஏக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றிப் பெற்றாலும், கட்சிக்குள் நிலவும் பூசல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நக்கலடித்தார். நான்கு மாநிலங்களில் உள்ள கட்சி அணிகளில் உள்ள உட்கட்சி பூசலைக் கையாள்வதி...
காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி

காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, politics, அரசியல், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், வீடியோ
காஷ்மீர் பைல்ஸ் படமா? வெறுப்பை உமிழும் விஷம பிரச்சாரமா? கோடங்கி கேள்வி   https://youtu.be/60rtDfn_1gM
இந்தியா சுதந்திரம் அடைந்தது 2014ம் ஆண்டு என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என்கிறார் ப.சிதம்பரம்

இந்தியா சுதந்திரம் அடைந்தது 2014ம் ஆண்டு என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என்கிறார் ப.சிதம்பரம்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  இந்தியா சுதந்திரம் அடைந்தது 2014ம் ஆண்டு என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என்கிறார் ப.சிதம்பரம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் 90வது பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியதாவது, இந்திய அரசியலில் குமரி அனந்தன் தெரிந்து கொள்ளாத விஷயம் இருக்கமுடியாது. குமரி அனந்தன் 1933 ஆம் ஆண்டில் பிறந்தார். அன்று நடந்த வரலாறு பாடப்புத்தகத்தில் மறைக்கப்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் நடந்த வரலாற்றை மறைந்து வருகிறார்கள். இன்னும் வருகிற நாள்களில் 2014 ஆம் ஆண்டில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று எழுதினாலும் எழுவார்கள் என்று பாஜகவை விமர்சித்தார். மேலும், பாடப்புத்தகத்தின் வாயிலாக தான் வரல...
உக்ரைன் போர்- இதுவரை 780 அப்பாவி பொதுமக்கள் பலி, நடிகையும் கொல்லப்பட்டார் ஐ.நா வேதனை

உக்ரைன் போர்- இதுவரை 780 அப்பாவி பொதுமக்கள் பலி, நடிகையும் கொல்லப்பட்டார் ஐ.நா வேதனை

HOME SLIDER, ukrain war, World News, அரசியல், உக்ரைன் போர், உலக செய்திகள்
    உக்ரைன் மீதான போரில் இதுவரை 780 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய கட்டடங்கள் தீக்கிரையாகின. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன. கிழக்கு உக்ரைனில் கார்கிவ் நகருக்கு அருகே மெரேபாவில் பள்ளி மற்றும் சமுதாய கூடங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கார்கிவ் நகரில் உள்ள கிழக்கு ஐரோப்பியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டான பாரபஷோவோவில் குண்டுகள் வீசப்பட்டன. அதில் அந்த மார்க்கெட் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந...
ரூ.25 கோடிக்கு பெகாசஸ் உளவு கருவிகள் தருவதாக ஆபர் வந்தது- முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் தகவல்

ரூ.25 கோடிக்கு பெகாசஸ் உளவு கருவிகள் தருவதாக ஆபர் வந்தது- முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் தகவல்

HOME SLIDER, NEWS, politics, அரசியல்
NSO நிறுவனம் தங்களது பெகாசஸ் உளவு மென்பொருள் விற்பனைக்காக மேற்கு வங்க அரசை தொடர்புகொண்டதாகவும் இதற்காக ரூ.25 கோடி கேட்டதாகவும் ஆனால், அதனை வாங்க மறுத்துவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான NSO நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெகாசஸ் விவகா...
பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பகவந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இன்று பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழியுரிமை மற்றும் இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களுக்கான உரிமைகள் குறித்துக் குரலெழுப்புவதில் தமிழ்நாட்டிற்கும் பஞ்சாபிற்கும் நெடிய வரலாறு உண்டு. பஞ்சாப் மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசின் ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
கோவை சுகுணாபுரத்தில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட 60 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் 13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோவையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்....
காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது!

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. ஏப்ரல் 16-ந்தேதியில் இருந்து மே மாதம் 31-ந்தேதிக்குள் வட்டார தலைவர்கள், பிரதேஸ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ஜூலை 20-ந்தேதிக்குள் மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஜூலை 21-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் மாநில பொதுக்குழு, செயற்குழு, மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். மாநில தலைவர்களுக்கான தேர்தல் ஆகஸ்டு 21-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் அக்டோபர் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்படும். இந்த தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு நவம்பர் மாதம் அகில இந்திய தலைவருக்கான தேர்தல் நடைபெறும். உட்கட்சி தேர்தல் தொ...