புதன்கிழமை, ஜூலை 29
Shadow

World News

சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்

HOME SLIDER, World News, உலக செய்திகள்
  சிறிய வீட்டில் குடும்பத்துடன் குடியேறும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கபட்டார். அந்நாட்டு வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரமதமரானது இதுவே முதல் முனறயாகும். ரஷி சுனக்கின் மனைவி பெயர் அக்‌ஷயா மூர்த்தி . இவர் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக்-அக்‌ஷதா மூர்த்தி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இங்கிலாந்தில் போரிஸ்ஜான்சன் பிரதமராக இருந்த போது ரிஷி சுனக் நிதி மந்தரியாக இருந்தார். அந்த சமயம் அவர் லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-வது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மேற்கு லண்டனில் இருக்கும் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். மகள்கள் படிக்கும் பள்ளி இதன் அருகில் இருப்பதால் அவர் இந்த வீட்டில் க...

பிலிப்பைன்ஸ் நாட்டின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடிய ‘நால்கே’ புயல்! பேய் மழை!!

flood news, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டின் மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடிய 'நால்கே' புயல்! பேய் மழை!! தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன. இவை மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன. இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதன் எதிரொலியால் பிலிப்பைன்சை தாக்கும் புயல்கள் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங...
இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது பெற்ற நடிகர் சௌந்தரராஜா!

இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருது பெற்ற நடிகர் சௌந்தரராஜா!

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், செய்திகள், நடிகர்கள்
சிறந்த மனிதநேய விருதை பெற்றார் நடிகர் சௌந்தரராஜா நடிகர் சௌந்தரராஜா விற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது 2022 மலேசியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. Take Care International Foundation என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் "Pride of Humanity" விருது வழங்கி கௌரவிக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடு படுத்தி கொள்ளும் நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் ( Deputy Director of police - Malaysia Royal police ) ...
ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
20 வருட போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வருடம் முடிந்துள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்க தடை பிறப்பித்துள்ளனர். கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன....
இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து…முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை!

இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து…முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை!

HOME SLIDER, politics, World News, உலக செய்திகள், உலகம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்படும் ஆபத்து இருப்பதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். ஜூலை 15 ஆம் தேதி தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்க, கொழும்பு வாலுக்காரம விகாரையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.குறைந்தது இரண்டு நாட்களுக்காகவது அதிபர் பதவிக்கு வர வேண்டும் என்ற சிறுப்பிள்ளை தனமான எதிர்ப்பார்ப்புடன் அவர் அதிபர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டார். கோத்தபய ராஜபக்சே பதவி விலகி ரணிலை அந்த இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரவில்லை.1988,1989 ஆம் ஆண்டுகளில் பட்டலந்தை சித்திரவதை முகாமில் கொலை செய்த காலம் என நினைத்துக்கொண்டிருக்கின்றார். இல்லை, இது 2022 ஆம் ஆண்டில் இருக்கும் இலங்கை.இந்த காலத்தில் விளையாட முடியாது.அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் இணக்கம்...
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
தென் கிழக்கு உக்ரைனில் டினிப்ரோ ஆற்றங்கரையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணு மின் நிலையம் அமைந்துள்ளது. தொடர் தாக்குதல்களுக்கு பிறகு இந்த அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. அங்கு உக்ரைன் ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வந்தாலும், அணு மின் நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அணு மின் நிலையம் மற்றும் அந்த வளாகம் முழுவதையும் ரஷிய படைகள் தனது ராணுவ தளமாக பயன்படுத்திவருகிறது. அங்கு ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ரஷியா, அங்கிருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கர ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும்...
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார். சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அண்மையில் உரையாற்றியபோது, ​​இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துரைத்த அவர், "அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது" என்றார்....
புலம் பெயர்ந்த தமிழர்கள் முயற்சித்தால் இலங்கையை காப்பாற்றலாம்!? கோடங்கி பார்வை

புலம் பெயர்ந்த தமிழர்கள் முயற்சித்தால் இலங்கையை காப்பாற்றலாம்!? கோடங்கி பார்வை

HOME SLIDER, kodanki voice, politics, World News, உலக செய்திகள், வீடியோ
#srilanka #srilankanews #srilankpoliticalcrisis #srilankan புலம் பெயர்ந்த தமிழர்கள் முயற்சித்தால் இலங்கையை காப்பாற்றலாம்!? கோடங்கி பார்வை   https://www.youtube.com/watch?v=VxxelmgRyqU  
பூமி சுற்று வட்ட பாதையில் சுற்றிய செயற்கைகோள் நிலவை நோக்கி பயணம்- நாசா சாதனை!

பூமி சுற்று வட்ட பாதையில் சுற்றிய செயற்கைகோள் நிலவை நோக்கி பயணம்- நாசா சாதனை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, ராக்கெட் லேட் மற்றும் அட்வான்ஸ்ட் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணந்து கேப்ஸ்டோன் செயற்கைகோளை ஏவியது. நியூசிலாந்தின் மகியா தீபகற்பத்தில் சிறிய எலெக்டிரான் ராக்கெட்டில் 25 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்ட பாதையை அடைந்த செயற்கைகோள் அதிலிருந்து விலகி வெற்றிகரமாக நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது. இந்த செயற்கைகோள் நிலவை அடைய 4 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராக்கெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறும்போது, மீதமுள்ள பணிகள் வெற்றிகரமாக இருந்தால் கேப்ஸ்டோன் செயற்கைகோள், நிலவை சுற்றி ஒரு புதிய சுற்றுப் பாதையில் முதன் முதலில் செல்லும். பல தகவல்களை பல மாதங்களுக்கு அனுப்பும் என்றார். இந்த செயற்கைேகாள் குறைந்த செலவில் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேட்வே என...
‘மிஸ் இந்தியா’ பட்டத்தை கைப்பற்றிய சினி ஷெட்டி!

‘மிஸ் இந்தியா’ பட்டத்தை கைப்பற்றிய சினி ஷெட்டி!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
  வி.எல்.சி.சி.-பெமினா மிஸ் இந்தியா வேர்ல்டு 2022 அழகிப்போட்டி பல சுற்றுகளாக நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியின் இறுதி சுற்றுப்போட்டி மும்பையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில், 31 மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து வெற்றிபெற்ற அழகிகள் பங்கேற்றனர். அதில் சிறந்த அழகியை தேர்வு செய்ய நேர்காணல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த சினிஷெட்டி 'மிஸ் இந்தியா வேர்ல்டு 2022' பட்டத்தை வென்று முதலிடத்தை பிடித்தார். பின்னர் அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த ரூபல்ஷெகாவத் 2-வது இடத்தையும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுகான் 3-வது இடத்தையும் பிடித்தனர். நடிகைகள் நேகாதுபியா, மலாய்கா அரோரா, நடிகர் டினோமோரியா, வடிவமைப்பாளர்கள் ரோகித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குனர் ஷியாமக்தவார், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி...