ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் உக்ரைன் நிலத்தடி ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்ய ராணுவம்!
உக்ரைன் மீது ரஷ்யா முதல் முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதல்முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் மேற்கு பகுதியில் டெலியாட்டின் என்ற இடத்தில் நிலத்தடி ஆயுதக் கிடங்கை கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.
MiG-31 போர் விமானங்கள் மூலம் செலுத்தப்படும் கின்சஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பறந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் படைத்தவை.
ரஷ்ய ராணுவத்துடன் கூட்டு வைத்துள்ள உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், மரியுபோல் நகருக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது...









