பிரபல பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழகத்தின் தற்போதைய புதிய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய்யின் ஆட்சி குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் வெற்றியை ஒரு அதிர்ஷ்டமாகப் பார்க்கும் அவர், அவரது தற்போதைய ஆட்சி ‘குருவி தலையில் பனங்காய்’ இருப்பது போல் உள்ளதாகவும், அரசியலில் பயணிப்பது மிகவும் கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் ஏற்கனவே இருந்தவர்கள் செய்த விஷயங்கள் தான் என்றும், புதிதாக என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
விஜய்யிடம் தனக்கு கோட்-சூட் அணிவது பிடிக்கவில்லை என்றும், தமிழ்நாட்டின் பெருமையான வேஷ்டி-சட்டை அணிந்து அவர் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியு...