சனிக்கிழமை, ஜூலை 25
Shadow

politics

‘பத்மாவத்’ எதிர்ப்பு ; பா.ஜ.க.,  ஒட்டுமொத்த நாட்டையும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறது- ராகுல்காந்தி

‘பத்மாவத்’ எதிர்ப்பு ; பா.ஜ.க., ஒட்டுமொத்த நாட்டையும் கொழுந்து விட்டு எரிய வைக்கிறது- ராகுல்காந்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்'. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது' என்று மத்தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன. இதனிடையே, 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது' என்று சுப்ரீம் கோர்ட்  உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடைகளை உடைத்து `பத்மாவத்' திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அரியானா மாநிலம், குர்கிராமில் பள்ளி குழந்தைகளை ஏற...
இந்தியா வந்துள்ள ஆசியான் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

இந்தியா வந்துள்ள ஆசியான் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்திய குடியரசு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் சிறப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில் ஆசியான் கூட்டமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மேலும் ஆசியான் அமைப்பில் இந்தியா இணைந்ததன் 25-ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நடைபெறும் சிறப்பு மாநாட்டிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ், புரூனே, லாவோஸ் மற்றும் கம்போடியா நாட்டு தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். டெல்லி வந்திருக்கும் இந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் மியான்மர் தலைவர் ஆங்சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே மற்றும் வியட்நாம் பிரதமர் ஜுவான் பக் ஆகியோருடன் நேற்று முன்தினம் தனித் தனியே பேச்சுவார்த...
விருது அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை: இளையராஜா

விருது அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை: இளையராஜா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது. இளையராஜாவிற்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருது பெறுவது பெற்றி இளையராஜா கூறும்போது, ‘பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மத்திய அரசு என்னை கௌரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கௌரவித்ததாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்....
’நாளை நமதே’ ஸ்லோகனுடன்  கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..!

’நாளை நமதே’ ஸ்லோகனுடன் கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வார இதழில் எழுதி வரும் கட்டுரையில் கூறி இருப்பதாவது:- ‘மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21-ந்தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே’. ஆம், அந்தப் பயணத்திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இது தான். அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம். நான் ஏதோ சக்கரத்தைப் புதிதாக வடிவமைத்தவன் போல் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஏற்கெனவே அதைக் கண்டுபிடித்துச் சுழலவிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போய்ப் பாடம் கற்றேன். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்புகளுக்குச் சென்று அவர்களின் நற்பணிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு அதை அப்படியே நகலெடு...
பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பத்மாவத் படத்தை திரையிடலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மீறி பத்மாவத் படத்துக்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு அருகில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள், மால்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தனர். இதனால், சேதம் ஏற்படுத்திய கும்பலை விரட்ட போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள்  கலைந்து சென்றனர். இந்த வன்முறை தொடர்பாக ஏராளமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை நீடிப்பதால், அகமதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இன்று மாலை குருகி...

வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதனை தொடர்ந்து, விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் தாயாரை தரிசனம் செய்தனர். அதன்பின்னர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆண்டாளை பற்றி இழிவாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும். ரஜினியும், கமலும் அரசியலில் எனக்கு ஜூனியர்கள். நான் சீனியர் என பேசினார். மேலும், வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி போராட்டம் நடத்தி வரும் சடகோப ராமானுஜ ஜீயருக்கு விஜயகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்....
ஜெ., பிறந்த நாளில் EPS-OPS  ஆதரவாக உதயமாகிறது அம்மா டிவி, நமது அம்மா நாளிதழ்..!

ஜெ., பிறந்த நாளில் EPS-OPS ஆதரவாக உதயமாகிறது அம்மா டிவி, நமது அம்மா நாளிதழ்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அ.தி.மு.க., அதிகாரபூர்வ நாளிதழாக இருந்த, ‘நமது எம்.ஜி.ஆர்.,’ மற்றும் ஜெயா, ‘டிவி’ ஆகியவை, தற்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளன. அவர்களை, அ.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி விட்டதால், அ.தி.மு.க.,விற்கென புதிய நாளிதழ் மற்றும், ‘டிவி’ துவக்க, ஒருங்கிணைப்பாளர்,பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்,பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். நம் தமிழகத்தில் உள்ள எல்லாக் கட்சிகளும் தங்களுக்கெனத் தனியாக தொலைக்காட்சி வைத்துள்ளன. ஆனால் சசிகலாவிடமிருந்து ஓபிஎஸ் தலைமையில் தனி அணியாக பிரிந்தபிறகு அவர்களுக்கென ஒரு தனி தொலைக்காட்சி இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் ஜி டிவி என்ற பெயரில் இயங்கி வந்த சேனல் ஒன்று தொடர்ச்சியாக நடத்த முடியாமல் மூடப்பட்டது. அந்த சேனலை ஓபிஎஸ் அணி விலை பேசி வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பல கோடிகள் கைமாறியதாகவும் தெரிகிறது. அந்த தொலைக்காட்சி...
தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும்: டி.டி.வி.தினகரன்

தனிக்கட்சி தொடங்கித்தான் ஆக வேண்டும்: டி.டி.வி.தினகரன்

HOME SLIDER, NEWS, politics
கோவையில் இருந்து வந்த டி.டி.வி.தினகரன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறதே? பதில்:- 60 சதவீதம் பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றினால் பணப்புழக்கமே இல்லாமல் தொழிலதிபர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பஸ் கட்டண உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். கேள்வி:- ஜெயலலிதா மரணம் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதால் உங்களையும் திவாகரனையும் கைது செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளரே? பதில்:- கோமாளிகளுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து உங்கள் குடும்பத்தில் மாறுபட்ட கருத்து...
நையாண்டி, நக்கல் விவகாரத்தில் சூர்யாவிடம் தனியார் டிவி மன்னிப்பு கேட்டது..!

நையாண்டி, நக்கல் விவகாரத்தில் சூர்யாவிடம் தனியார் டிவி மன்னிப்பு கேட்டது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமித்ப் பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமிதாப்புடன் சூர்யா நடிக்க உள்ளதை கிண்டல் அடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு தொகுப்பாளினிகள் பேசினர். சூர்யாவின் உயரத்தை கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இது சூர்யா ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொகுப்பாளினிகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. என்று சூர்யா கூறியிருக்கிறார். இந்நிலையில...
சூர்யாவிடம் கதை சொல்லனுமா… அப்ப குறும்படம் எடுங்க… பரிசும் உண்டு வாய்ப்பும் உண்டு..!

சூர்யாவிடம் கதை சொல்லனுமா… அப்ப குறும்படம் எடுங்க… பரிசும் உண்டு வாய்ப்பும் உண்டு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
கோலாகலமாகத் தொடங்கிய ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2    "குறும் படங்களை பெரிய திரையில் திரையிடப்படக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது" இயக்குநர் ராம்   மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி குறித்த தொடக்கவிழா இன்று சென்னை ஜி ஆர் டி கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.   இந்த விழாவில் முன்னணி இயக்குநர்களான ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.   இந்த போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில்,‘ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும் பட போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகைத்தந்த அனைத்து இளந் தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறே...