இந்தியா வந்துள்ள ஆசியான் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
இந்திய குடியரசு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் சிறப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில் ஆசியான் கூட்டமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
மேலும் ஆசியான் அமைப்பில் இந்தியா இணைந்ததன் 25-ம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நடைபெறும் சிறப்பு மாநாட்டிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, மியான்மர், பிலிப்பைன்ஸ், புரூனே, லாவோஸ் மற்றும் கம்போடியா நாட்டு தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.
டெல்லி வந்திருக்கும் இந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் மியான்மர் தலைவர் ஆங்சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே மற்றும் வியட்நாம் பிரதமர் ஜுவான் பக் ஆகியோருடன் நேற்று முன்தினம் தனித் தனியே பேச்சுவார்த...








