துரோகமிழைத்த வாசன் ராஜினாமா செய்த த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம்!
துரோகமிழைத்த வாசன் ராஜினாமா செய்த த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம்!
வாசன் துரோகமிழைத்து விட்டதால் எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன் என த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம் அறிவித்திருப்பது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை தங்கம், “நான் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக பல போராட்டங்களை நடத்தி ஊதிய உயர்வு பெற்று தந்துள்ளேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் சேர என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடு இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுகவுடனான கூட்டணியில் ஒரு தொகுதி பெற எதிர்ப்பு தெரிவித்தேன். 6 தொகுதியை வாங்க வேண்டாம். சுயேச்சையாக சைக்கிள் சின்னத்தில் 12 தொகுதிகளில் போட்டியிடலாம் என வாசனிடம் கூறினேன்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டாம் எனவும் தெரிவித்தேன். ஆனால் வாசன் என்னை கைவிட்டு, எனக்கு எதிராக துரோகம் ...









