ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன் – ஜோ பைடன் வாக்குறுதி

அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன் – ஜோ பைடன் வாக்குறுதி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன் - ஜோ பைடன் வாக்குறுதி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் தனது வெற்றி குறித்து டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ அமெரிக்கா, நமது மிகச்சிறந்த நாட்டை வழிநடத்த நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தற்காக நான் பெருமைப்படுகிறேன். நமது முன் கடினமான வேலைகள் உள்ளது. ஆனால், நான் உங்களிடம் வாக்குறுதி அளிக்கிறேன்.. நீங்கள் எனக்கு வாக்களித்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் நான் அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராக இருப்பேன். நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்’ என தெரிவித்துள்ளார்....
வேல் யாத்திரை வழக்கு விசாரணை நவம்பர் 10-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

வேல் யாத்திரை வழக்கு விசாரணை நவம்பர் 10-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை இன்று முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து  தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி  மறுக்கப்பட்டது. ஆனால் பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை  திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ,நேற்று  காலை தடையை மீறி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், கையில் வேலுடன் திருத்தணி நோக்கி புறப்பட்டார். பின்  தடையை மீறி தொடங்கப்பட்ட வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  இந்த யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர், எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர்.பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பி உத்தரவை எத...
அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் ஆக முடியும். இதற்கிடையில்,தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. ஆரம்பம் முதலே ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார். இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் எண்ணிக்கை தற்போது நிறைவு பெற்றது. இந்த மாநிலத்திலும் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார். இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார்...
10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-49

10 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-49

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி வருகிறது. தற்போது பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. இவற்றுடன் இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 பன்னாட்டு செயற்கைகோள்களையும் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும். இந்த 10 செயற்கைகோள்கள் அடங்கிய ராக்கெட் ஆந்திரா மாநிலம் ஸ்...
வேல் யாத்திரை- சட்டம் தன் கடமையை செய்யும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வேல் யாத்திரை- சட்டம் தன் கடமையை செய்யும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வேல் யாத்திரை- சட்டம் தன் கடமையை செய்யும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாரதிய ஜனதாவின் வேல் யாத்திரை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ என்றார்...
28 கோடி நெடுஞ்சாலைத்துறை பேக்கேஜ் டெண்டர் முறைகேடு தென்காசியில் 5 பேர் சஸ்பெண்ட்

28 கோடி நெடுஞ்சாலைத்துறை பேக்கேஜ் டெண்டர் முறைகேடு தென்காசியில் 5 பேர் சஸ்பெண்ட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  28 கோடி பேக்கேஜ் டெண்டர் முறைகேடு தென்காசியில் 5 பேர் சஸ்பெண்ட் தமிழகத்தில் பொதுப்பணித் துறையில் கடந்த 50 ஆண்டுகளாக ஒவ்வொரு திட்டப்பணிக்கும் தனித்தனியாக டெண்டர் கோரும் நடைமுறை அமலில் இருந்து வந்தது. இதை மாற்றி, பொதுப்பணித் துறையில் பேக்கேஜ் டெண்டர் (பல பணிகளுக்கு ஒரே டெண்டர்) முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் 15.2.2019-ல் அரசாணை பிறப்பித்திருந்தார். இந்த பேப்கேஜ் முறை மாநிலஅளவில் பெரிய அளவிலான 10 ஒப்பந்ததாரர் களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இதன் டென்டர் காரணமாக ஒப்பந்தத் தொழிலில் உள்ள 5 ஆயிரம் ஒப்பந்ததாரர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், தென்காசி பகுதியில் 28 கோடி செலவில் கோட்டத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்துவது, அகலப்...
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு கறுப்பர் கூட்டம்,  கடந்த ஆண்டு முருகனின் கந்தசஷ்டி கவசம் குறித்து வெளியிட்ட அவதூறான கருத்து, தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான கண்டனம் எழுந்த நிலையில், அதை வைத்து தமிழகத்தில் பாரதியஜனதா கட்சி அரசியல் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக  வரும் 6ந்தேதி திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல்யாத்திரை ஒன்றை நடத்தப்போவதாக  அறிவித்து உள்ளது. சுமார் 1 மாத காலம் நடைபெறும் இந்த இந்த வேல் யாத்திரையானது, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று இறுதியாக , டிசம்பர் 6ந்தேதி திருச்செந்தூரில் முடிவடைய உள்ளது. தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரையில் மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது பாஜகவின...
கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்! 52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில், ‛ரிபப்ளிக் டிவி’ ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது, தன்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாகவும், அர்னாப் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், கடந்த 2018 ம் ஆண்டு ‛ரிபப்ளிக் டிவி’ நிறுவனம் தர வேண்டிய நிலுவை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி, 53 வயதான இன்டீரியர் டிசைனரான அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை, அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்ததாக, தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை அலிபாக் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி, அன்வய் நாயக்கின் மகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகார் அளித்ததாகவும், இதனால் இந்த வழக்க...
நம்ம(வர்) முதல்வர் கமல்ஹாசன் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

நம்ம(வர்) முதல்வர் கமல்ஹாசன் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நம்ம(வர்) முதல்வர் கமல்ஹாசன் திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் பரபரப்பு தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து அனைத்து அரசியல்கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனும் தனது கட்சிப் பணியைத் தொடங்கியுள்ளார். தனது கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி வாரியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், கமல் ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அரசாள காத்திருக்கும் நம...