சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை: சித்தராமையா!

இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை: சித்தராமையா!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
கர்நாடக சட்டசபையில் நேற்று தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான சிறப்பு விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:- தேர்தல் முறை மாற வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இதில் சீர்திருத்தம் ஏற்படாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகிவிடும். ஜனநாயகம் பலவீனம் அடைந்தால் நாடு பலவீனமாகிவிடும். தேர்தல் நடைமுறை ஒவ்வொரு முறையும் பலம் அடைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இது பலவீனம் அடைந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று அம்பேத்கர் சொன்னார். ஆனால் இன்று அரசியல் கட்சிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் இடையே கூட்டணி தொடங்கியுள்ளது. இதன்மூலம் அந்த பெரு நிறுவனங்கள் அரசை கட்டுப்படுத்துகின்றன. மது நாட்டில் உள்ள 142 பெரு நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.54 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த 2013-ம் ஆண்டில் ரூ.23 லட்சம் கோடியாக இருந்தது. நாட்டில் 19 ...
வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பா.ம.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.எல்.கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது, உள் ஒதுக்கீடு செல்லாது என்ற என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை...
பான் கார்டை ஆதாருடன் இணைக்க 2023 மார்ச் 31 வரை அவகாசம்!

பான் கார்டை ஆதாருடன் இணைக்க 2023 மார்ச் 31 வரை அவகாசம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது மார்ச்.31, 2023 வரை கால அவகாசம் வழங்கி நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அதற்கு பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளது. பான் கார்டு என்பது அனைவரும் வாங்கியிருக்க வேண்டும் என்றாலும், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பான் கார்டு என்பது கட்டாயமான ஒன்றாகும். ஒருவர் கட்டும் வருமான வரி கணக்கிடப்படுவது பான் எண் அடிப்படையில்தான். அதேபோல், ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நம்முடைய அனைத்து பயன்பாட்டிலும் அது தொடர்புடைய ஒன்றாக இருந்து வருகிறது. வங்கி எண்ணுடன் ஆதார் இணைப்பு, நம்முடைய மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பு என்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியமாக இருந்து வருகிறது அந்த வகையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய வருமான வரித்துறை...
அம்பேத்கார் பட சர்ச்சை வங்கி அதிகாரிக்கு ஆதரவாக கோர்ட் அதிரடி தீர்ப்பு

அம்பேத்கார் பட சர்ச்சை வங்கி அதிகாரிக்கு ஆதரவாக கோர்ட் அதிரடி தீர்ப்பு

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
  சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த கெளரிசங்கர்,கடந்த 2004ம் ஆண்டு அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாக 2006ம் ஆண்டு வங்கி அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வங்கி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய தொழிலாளர்கள் தீர்ப்பாயம், கெளரிசங்கருக்கு மீண்டும் பணி வழங்க 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வங்கியின் பணியிடை நீக்கம் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, கெளரிசங்கர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிகளில் தேச தந்தை மகாத்மா...
ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா

ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடி ராஜீவ்காந்தி கலையரங்கத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் . தமிழக கேரள மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெற முன் ஏற்பாடு ஆலோசனை கூட்டம் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவதை ஒட்டி, தேக்கடி ராஜீவ்காந்தி கலையர...
முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

முதல்வர் 4 நாள் டெல்லி பயணம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களுக்கு மேல் பலம் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டிக்கொள்வதற்கு நிலம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி தி.மு.க.வுக்கு டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பா.ஜனதா அலுவலகம் அருகே 2013-ம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் தி.மு.க. அலுவலகமான ‘அண்ணா கலைஞர் அறிவாலயம்’ கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதன்படி டெல்லி அறிவாலய கட்டுமான பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அறிவாலயத்தை திறக்கலாமா? என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வந்ததால் திறப்பு விழா தேதி உடனே முடிவு செ...
ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்!

ஏப்ரல் 1 முதல் உயர்கிறது சுங்கச்சாவடி கட்டணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் வானகரம், சூரப்பட்டு ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த 2 சுங்கச்சாவடிகளும் இன்னும் அகற்றப்படவில்லை. அதே நேரத்தில் இந்த 2 சுங்கச்சாவடிகளிலும் வருகிற 1-ந் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டரை பெரும்புதூர், நல்லூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளிலும் வருகிற 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல இதுவரை ரூ.30 கட்டணம் இருந்தது. அது குறைந்தபட்சமாக ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.35...
போக்குவரத்துதுறை அமைச்சரானார் சிவசங்கர்… இராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்!

போக்குவரத்துதுறை அமைச்சரானார் சிவசங்கர்… இராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்!

HOME SLIDER, NEWS, அரசியல், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின்படி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜகண்ணப்பன் இருந்து வந்தார். அண்மையில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் (பிடிஓ) ராஜேந்திரன் என்பவரை சாதி பெயரை சொல்லி ராஜகண்ணப்பன் விமர்சித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு...
துபாய் விமானத்திலிருந்து நெஞ்சுவலி காரணமாக அவசரமாக இறங்கிய அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி!

துபாய் விமானத்திலிருந்து நெஞ்சுவலி காரணமாக அவசரமாக இறங்கிய அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக அமைச்சா் துரைமுருகன் இன்று காலை 9.50 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல சென்னை விமானநிலையம் வந்தாா். அவருடைய வீசாவில் ஏதோ பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டாா். அதன்பின்பு அமைச்சரின் விசாவில் உள்ள பிரச்னையை சரி செய்து, புதிய விசா வாங்கிவிட்டு இன்று மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் அமைச்சா் துரைமுருகனுக்கு டிக்கெட் போடப்பட்டது. அமைச்சரும் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்துவிட்டாா். ஏா் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அமைச்சரை வரவேற்று விமானநிலையத்திற்குள் அழைத்து சென்றனா். அவருக்கு போா்டிங் பாஸ், பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்குள் ஏறியும் அமா்ந்துவிட்டாா். ஆனால் வ...
பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு!

பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிவுள்ள டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார். சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனம் பெற்று வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.11 கோடியை மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கு தரவேண்டிய சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான திய...