பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!
பீதி வேண்டாம்... கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:-
கொரோனா வைரஸ் பற்றி இங்கே சொன்னார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தான், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மாலையிலேயே, கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கமாக அதை தெரிவித்தார். அதனுள் செல்ல விரும்பவில்லை. எதிர்க்கட்சி தலைவரும் இதைப் பற்றி தெரிவித்தார்.
அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையிலே அரசு முழு மூச்சோடு ஈடுபட்டு வருகிறது. ஆகவே, என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை தடுப்பு நடவடிக்க...









