ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

வாடிகனில் கொரானா பீதி பிரார்த்தனையை தனிமையில் நடத்திய போப்!

வாடிகனில் கொரானா பீதி பிரார்த்தனையை தனிமையில் நடத்திய போப்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலகையே பயங்கர பீதிக்குள்ளாக்கியுள்ள கொரானா வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலிதான் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 7,375 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வாடிகன் நகரிலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை வாடிகன் நகரமும் பின்பற்றி வருகிறது. 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாடிகன் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள தேவாலயங்களில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாடிகன் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. ...
அரசு வழங்கும் மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கும் வயது வரம்பு திடீர் உயர்வு!

அரசு வழங்கும் மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கும் வயது வரம்பு திடீர் உயர்வு!

HOME SLIDER, NEWS, politics
    மானிய விலையில் வழங்கப்படும் இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உயர்வு..! மானிய விலையில் அரசு வழங்கும், இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். கோவை குளத்துப்பாளையம் பகுதியில், மகளிர் தின விழாவில், நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி பேசிய அவர், மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடன் உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு மதிப்பு அளித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், தமிழக அரசு மகளிருக்கு மானிய விலையில் வழங்கி வரும், இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு, 40-லிருந்து 45 ஆக உயர்த்தபட்டுள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்....
தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்பிக்களாக திமுக, அதிமுக சார்பில் 6 பேர் தேர்வு! தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை எம்பிக்கள் 6 பேரின் பதவிகாலம் முடிவடைந்ததால் தற்போது உள்ள உறுப்பினர்கள் அடிப்படையில் திமுக, அதிமுக சார்பில் தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது. திமுக சார்பில் திருச்சி சிவா, இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கபட்டனர். அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை இவர்களோடு ஜி.கே.வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜி.கே.வாசன், தம்பிதுரை இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்....
CAA, NBR சட்டங்களால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது – தெலங்கானா முதல்வர் ஆதங்கம்!

CAA, NBR சட்டங்களால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது – தெலங்கானா முதல்வர் ஆதங்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  CAA, NBR சட்டங்களால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து வருகிறது - தெலங்கானா முதல்வர் ஆதங்கம்! தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) மற்றும் மக்கள் தொகை பதிவேடு (என்.பி. ஆர்) குறித்து நடந்த விவாதத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் பேசியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக வலிமையான தீர்மானம் கொண்டுவந்து நாட்டுக்கு செய்தி சொல்ல வேண்டும். என்னிடம் கூட பிறப்புச் சான்றிதல் கிடையாது. அப்படி இருக்கும் போது நான் எப்படி என் தந்தையின் பிறந்த இடம், பிறந்த தேதியை நான் எப்படி நிரூபிக்க முடியும். எனக்கு கூட என்.பி.ஆரை நினைத்து கவலையாக இருக்கிறது. நான் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள என்னுடைய வீட்டில் பிறந்தேன். அப்போது ஆஸ்பத்திரிகள் கி...
புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    புதிதாக கட்டப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்ததால் அமைச்சர் நிகழ்ச்சியில் வாய்க்காலில் விழுந்த மதுரை அதிமுகவினர்! மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள கால்வாய் இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர். மதுரை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகர் முழுவதும் ஆங்காங்கே ரவுண்டானா அமைக்கப்பட்டு அங்கு மதுரையின் தொன்மையையும் வீரத்தையும் காட்டக்கூடிய சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்களின் விளையாட்டு சிலைகள் வைக்கப்பட உள்ளது . இதன் தொடக்க விழா கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ...
காவல்துறைக்கு புதிய வாகனங்கள் – முதல்வர் வழங்கினார்

காவல்துறைக்கு புதிய வாகனங்கள் – முதல்வர் வழங்கினார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ரூ.95.58 கோடி மதிப்பிலான 2,271 புதிய வாகனங்களை காவல்துறையின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் புதிய வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.....
திமுகவில் துரைமுருகன், ஆ.ராசாவுக்கு புதிய பதவிகள்!

திமுகவில் துரைமுருகன், ஆ.ராசாவுக்கு புதிய பதவிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுகவை பொறுத்தவரை கட்சித் தலைவர் பதவிதான் முதன்மையானதாக இருந்தாலும்  பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும். 1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் நீடித்து வந்த அவர் காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்த  பொதுச்செயலாளர் பதவி யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக உள்ள கட்சியின்  பொருளாளர் துரை முருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதே நேரம் ஸ்டாலின் நிழலாக எப்போதும் அவரோடே இருந்து மிக முக்கியமான நிகழ்வுகளில் அதிரடியாக செயல்படும் ஆ.ராசாவும் பொதுச் செயலாளர் போட்டியில் இருப்பதாக தெரிகிறது. துரைமுருகனை போட்டியின்ற...
கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை – ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை - ஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆலோசனை சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் தற்போது உலகின் 90-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 380 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி, இந்தியாவிலும் 34 பேருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுதும் படுவேகமாக பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய அரசு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து டெல்லியில் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு கூட்டம் நடத்தினார். மத்திய சுகாதாரத்துறை மந்...
ஊழல் புகாரில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் கிடைக்காது – மத்திய அரசு அதிரடி

ஊழல் புகாரில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் கிடைக்காது – மத்திய அரசு அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊழல் புகாரில் சிக்கிய அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் கிடைக்காது - மத்திய அரசு அதிரடி ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு துறைகளின் செயலாளர்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்பு, அவர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள், குற்றவியல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் ஆகியோருக்கு காவல்துறை அனுமதியை நிறுத்தி வைக்க...
கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்!

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர்களுக்கு அரசு கடிதம்! இந்தியாவில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தது. அதனைதொடர்ந்து தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆய்வு கூட்டங்கள் அரசு மருத்துவர்களும் தனியார் மருத்துவர்களும் கொரானா வைரைஸ் தொடர்பாக ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கொரனா வைரஸ் தீவிரம், அதை தடுக்கு வழிமுறைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தனி வார்டுகள் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள்...