சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மரியாதை!

மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மரியாதை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
53-வது நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை! பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்களான வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா. பகுதி செயலாளர்கள் மதன்மோகன், ஏழுமலை, ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ., விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அகஸ்டின்பாபு, சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் வ...
இன்றைய முக்கியச் செய்திகள் – Today Head Lines – 03.02.22

இன்றைய முக்கியச் செய்திகள் – Today Head Lines – 03.02.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, செய்திகள்
  அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு இந்தியா முழுவதுமுள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேல்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆயிரத்து 429 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் இன்று இரண்டு ஆடுகளை கொன்று சிறுத்தை அட்டகாசம் செய்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். நம்பியூர் காந்தி நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெ...
ஒரு யூரோவுக்கு வாங்கப்பட்டு சொகுசு பார் ஆக மாற்றப்பட்ட விமானம் ஒரு மணி நேரத்திற்கு 1 லட்சம் சம்பாதிக்கிறது!

ஒரு யூரோவுக்கு வாங்கப்பட்டு சொகுசு பார் ஆக மாற்றப்பட்ட விமானம் ஒரு மணி நேரத்திற்கு 1 லட்சம் சம்பாதிக்கிறது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  நம்மூரில் ஓடாமல் நின்று போன கார், டெம்போ, வேன், சில சமயங்களில் பேருந்துகளை கூட சீரமைத்து, அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து சாலையோர உணவகக் கடைகளாக நடத்தி வருவதை நாம் கண்ணெதிரே பார்த்திருப்போம். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இது போன்ற பழைய வாகனங்களில் எண்ணற்ற அழகூட்டும் பணிகளை செய்து, சகல வசதிகளுடன் உணவகங்களை சிலர் நடத்தி வருகின்றனர்.     ஆனால், ஒரு முழு விமானமும் இதுபோல மாற்றி வடிவமைக்கப்பட்டு, அதில் பார் செயல்பட்டு வரும் செய்தி நமக்கு மிகவும் புதிது. அதிலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை, வெறும் நூறு ரூபாய்க்கு வாங்கி, அதன் மூலமாக கோடிக்கணக்கில் வருவாய் ஈட்ட முடிகிறது என்றால் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஏதோ இரண்டாம் தர நிறுவனத்தின் விமானம் இந்த விலைக்கு வந்திருந்தால் கூட அது நம்பும் படியாக இருக்கும். ஆனால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்த...
போலீசுடன் சேர்ந்து பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்த முயன்ற பாஜக நபர் உட்பட 4 பேர் கைது!

போலீசுடன் சேர்ந்து பலகோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்த முயன்ற பாஜக நபர் உட்பட 4 பேர் கைது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தொன்மையான சிலைகளை பல கோடிக்கு கடத்த முயன்ற பாஜக பிரமுகர், 2 காவலர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதி என்ற போர்வையில் இருந்த பாஜக பிரமுகரும், ஏற்கனவே கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலரும் சிலை திருடர்கள் ஆனது எப்படி.? ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கியபுள்ளி ஒருவர் தொன்மையான உலோக சிலைகளை கடலில் படகு மூலமாக வெளிநாடுகளுக்கு கடத்த உள்ளார் என்ற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதன் பேரில் நான்கு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் முதுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான அலெக்ஸ்(எ) அலெக்சாண்டர்(52) தொன்மையான சிலைகள் வைத்திருப்பதும் அவர் அதனை ரூபாய் ஏழு கோடி மதிப்பில் வெளிந...
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2001 - 2006-ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது,  வருமானத்துக்கு அதிகமாக 4.9 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்திருந்ததாக 2006-ல்ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இதைத்தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டம்,1988ன் கீழ் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிந்த எஃப்ஐஆர் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், தற்போது 14.5.2001 முதல் 31.03.2006 வரையிலான காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வாங்கிய சொத்துக்கள், அவரது குடும்பத்தினர் வாங்கி...
பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாகிவிட்டது- மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல்!

பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாகிவிட்டது- மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல்!

Assembly news, NEWS, செய்திகள்
பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாகிவிட்டது- மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல்! மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:- ஜனாதிபதியின் உரையில் எந்த பிரச்சினை பற்றியும் ஆழமாக குறிப்பிடப்படவில்லை. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அந்த உரையில் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பின்மை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒரு குடிமகனாக நாட்டில் நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து கவலை கொண்டுள்ளேன். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. இந்தியா என்பது கூட்டாட்சி, ராஜாங்கம் இல்லை. தமிழகத்தில் நீட் குறித்த விவகாரத்துக்கு நீங்கள் (மத்திய அரசு) செவிசாய்க்கவில்லை. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அதன் கண்ணியம், கலாச்...
ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயினுக்கு ஆசைப்பட்டு தரகரை கடத்திய போலீஸ் கான்ஸ்டபிள்!

ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயினுக்கு ஆசைப்பட்டு தரகரை கடத்திய போலீஸ் கான்ஸ்டபிள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 300 கோடி மதிப்புள்ள பிட்காயின் கிரிப்டோகரன்சியை அபகரிப்பதற்காக, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தரகரை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புனே போலீஸ் கூறியதாவது:- புனே சைபர்கிரைமில் வேலை பார்த்துவந்த கான்ஸ்டபிள் திலிப் துக்ரம் காந்த்ரே என்பவருக்கு விஜய் நாயக் என்ற பங்குச்சந்தை தரகரிடம் ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் கிரிப்டோகரன்சி தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் இருந்து பிட் காயினை அபகரிக்க அவர் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் 14-ம் தேதி விஜய் நாயக்கை ஹோட்டலில் இருந்து கடத்தி சென்றுள்ளார். இதை தொடர்ந்து கடத்தப்பட்டவரின் நண்பர் போலீசிடம் புகார் அளிக்க, 8 பேரும் சேர்ந்து கடத்தியவரை சாலையில் விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து விஜய் நாயக் கடத்தியவர்களை அடையாளம் காண்பிக்க அனைவரும் கைது செய்யப்பட...
நாட்டில் உள்ள முக்கியமான 37 கட்சித்தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்!

நாட்டில் உள்ள முக்கியமான 37 கட்சித்தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு நாட்டின் 37 கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு. நாடு முழுவதும் உள்ள சமூகநீதி கொள்கையை முன்னெடுத்துச் செல்ல அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கவுள்ளதாக ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் கடிதம். நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர், பட்டியிலின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களை பாதுகாக்கவே இந்த கூட்டமைப்பு - ஸ்டாலின். பாஜக அல்லாத தேசிய கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு. சமத்துவம், சுய மரியாதை, சமூகநீதியில் நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றிணைந்தால்ஒன்றிணைந்தால்தான் பிரிவினை, மதவாதத்தை எதிர்த்து போராட முடியும் - ஸ்டாலின். பன்முகத்தன்மை கொண்ட நமது ஒன்றியம் பிரிவினை, மத மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது - ஸ்டாலின். சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந...
பசுமைப் புற்களின் மேல் வெள்ளைக் கம்பளம்… கொடைக்கானலில்  மீண்டும் உறைபனி

பசுமைப் புற்களின் மேல் வெள்ளைக் கம்பளம்… கொடைக்கானலில் மீண்டும் உறைபனி

HOME SLIDER, NEWS, செய்திகள்
    ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சியான‌ கொடைக்கானல் ஒரு குளுமை நிறைந்த சர்வதேச சுற்றுலாத் தலமாகும். இங்கு டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் கடும் உறைபனி பொழிவு காணப்படும். இந்நிலையில் கடந்த வருடம் பெய்த தொடர் மழையின் காரணமாக உறைபனி காலமானது தாமதமாக துவங்கியது. மேலும் டிசம்பர் மாதம் இறுதி நாட்களில் மட்டும் உறை பனியானது  சில நாட்கள் மட்டும் நிலவியது. அதன்பின் கடும் குளிர்,சாரல் மழை மற்றும் மிதமான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்ப‌நிலை 11 டிகிரி செல்சியஸ் வரை நிலவியதால் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் குளிர் நிலவி வந்தது.     இந்த நிலையில்  இன்று அதிகாலையில் 9 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்பநிலை காணப்பட்டு கடும் குளிர் நிலவியதால் பசுமைப்புற்களின் மேல் விழுந்த நீர்ப் பனித் துளிகள் உறைந்த...
இன்றைய முக்கியச் செய்திகள் 02.02.22

இன்றைய முக்கியச் செய்திகள் 02.02.22

HOME SLIDER, kodanki head line, kodanki headlines news, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழ்நாட்டில் திங்களன்று 19,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று 16,096 ஆக குறைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய தற்போது அவசியம் இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 80 சதவிகித மாணவர்கள் வருகை தந்ததாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.   வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை உடனடியாக களைய வேண்டும் என. அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக-வுக்கு குக்கர் சின்னமும், மதிமுக-வுக்கு பம்...