சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக சிப்காட் தொழிற் பூங்காக்களில் 2.63 லட்சம் மரக்கன்றுகள்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ.10.36 கோடியில் 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் தொழில் பூங்காக்கள் உள்ள இடங்களை மேம்படுத்தும் வகையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசுக்கு துணை நின்று, பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றது.
தமிழகத்தில் 33,776 ஏக்கர் நிலப்பரப்பளவில், 15 மாவட்டங்களில், 7 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட 23 தொழில் பூங்காக்களுடன் தொழில் வளர்ச்சி நிறுவனங்களில் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு, ஜூலை மாதம், அனைத்து தொழில் பூங்காக்களிலும் மரக்கன்றுகளை நட்டு, அவற்றை சரிவர பேணி, திரும்பும் திசையெல்லாம் பச்சைப்பசேலென செடிகளும், செடிகள் வளர்ந்த நிலை...









