செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

உலகின் 10 “Magnetic Cities” பட்டியல்… லண்டன் தொடர்ந்து சாதனை!

உலகின் 10 “Magnetic Cities” பட்டியல்… லண்டன் தொடர்ந்து சாதனை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  உலகின் 10 “Magnetic Cities” பட்டியலை வெளியிட்டது குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ். தொடர்ந்து 9 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்து லண்டன் சாதனை.  குளோபல் பவர் சிட்டி இன்டெக்ஸ் உலகின் மிக Magnetic Cities நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மோரி மெமோரியல் ஃபவுண்டேஷனின் நகர்ப்புற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட, காந்த நகரங்களின் குறியீடானது அதிகாரப்பூர்வ தரவு மற்றும் ஆய்வு செய்த அனைத்து 48 நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்களுடன் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது. குளோபல் பவர் சிட்டி குறியீட்டில் தரவரிசைக்கான முதன்மைக் காரணி காந்தவியல் ஆகும். உலகெங்கிலும் உள்ள மக்கள், நிறுவனங்கள் மற்றும் மூலதனத்தை ஈர்க்க இந்த நகரங்களின் திறனை எடுத்துக்கொள்கிறது. 70 நடவடிக்கைகளை இது அடிப்படையாகக் கொண்டது. இதில் பொருளாதாரம், ஆராய்ச்சி, வளர்ச்சி, அணுகல் போன்றவைகள் அடங்கும். உலகின் முதல் 10 Magnetic Cities...
எய்ம்ஸில் பணிபுரியும் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று முதல் தொடங்கியது!

எய்ம்ஸில் பணிபுரியும் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று முதல் தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எய்ம்ஸில் பணிபுரியும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். எய்ம்ஸில் பணிபுரியும் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 6-வது மத்திய ஊதியக்குழு உட்பட அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) செவிலியர் சங்கத்திற்கு பல கோரிக்கைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இதனால், தங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி செவிலியர் சங்கம் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. செவிலியர்களின் வேலைநிறுத்தம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் பயத்தை அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில், எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா ஒரு அறிக்கையை வெளியிட்டு, செவிலியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார். தொற்றுநோய்களின் இந்த நேரத்தில் நர்சிங் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறினார்....
சென்னை ஐஐடியில் 71 மாணவர்களுக்கு கொரோனா!

சென்னை ஐஐடியில் 71 மாணவர்களுக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.  சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஐஐடி முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்றுவரை 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு உறுதியாகியுள்ளது. மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஐஐடி மாணவர்களுக்கு அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கூ...
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு ; டிச.18ல் திமுக தோழமைக் கட்சிகள் ஒரு நாள் உண்ணாவிரதம்!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு ; டிச.18ல் திமுக தோழமைக் கட்சிகள் ஒரு நாள் உண்ணாவிரதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் சென்னையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட இருப்பதாக திமுக தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன. வருகின்ற 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக  தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ இந்திய நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 19 நாட்களாக, அறவழியில் அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்கள...
8 வழிச்சாலைக்கு எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற முதல்வருக்கு தர்மபுரி விவசாயிகள் கண்டனம்

8 வழிச்சாலைக்கு எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற முதல்வருக்கு தர்மபுரி விவசாயிகள் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையான விவசாயி என்றால், சேலம் 8 வழிச்சாலை உறுதியாக வராது என்று அவர் எழுத்துப்பூர்வமாக அறிக்கை விட வேண்டும் என்று சேலம் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு விசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, வரும் 16ஆம் தேதி தர்மபுரி எம்.பி., செந்தில்குமாரை சந்தித்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக 8 வழிச்சாலைக்கு நிரந்தர தடை விதிக்க கோரிக்கை விடுக்க முடிவெடுக்கப்பட்டது.   மேலும், 8 வழிச்சாலைக்கு எந்த விவசாயியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறும் முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் ஏற்கனவே இருக்கும் பல சா...
‘சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்’ டார்ச் சின்னம் மறுக்கப்பட்டதில் கமல் ஆவேசம்!

‘சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்’ டார்ச் சின்னம் மறுக்கப்பட்டதில் கமல் ஆவேசம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல் ஆணையம், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “சுதந்திரம், ஜனநாயகம் அன்றாடும் கவனிக்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டு இருக்கிறது. அதனால் தான் எங்கள் கட்சிகளில் நிறைய மருத்துவர்கள் உள்ளனர். அரங்கம் எங்கும் தலைகளை பார்க்கவில்லை, தலைவர்களை பார்க்கிறேன். தமிழகத்தில் எங்களுக்கான டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையம் மறுக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் பல மாற்றங்கள் செய்ய காத்து கொண்டு இருக்கிறோம். சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள். நேர்மை தான் எங்கள் யுத்தி. பணத்திற்காக வாக்குகளை விற்காதீர்கள்” என தெரிவித்துள்ளார்....
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட தடை நீக்கம்!

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பட தடை நீக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள் வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜரான வழக்க...
தமிழகத்தில் கமல் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை!

தமிழகத்தில் கமல் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்காளம் உள்பட சில மாநிலங்களுக்கு 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.  2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தற்போது சின்னம் ஒதுக்கியுள்ளது. * சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம் * அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியுள்ளது. * தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு * புது...
அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் சண்ட்ரா லிண்ட்செ என்ற பெண்ணுக்கு போடப்பட்டது. அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணிக்கு சண்ட்ராவுக்கு அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது....
கமிஷன் அரசாங்கம் என அதிமுகவை வசை பாடிய கமல்

கமிஷன் அரசாங்கம் என அதிமுகவை வசை பாடிய கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கமிஷன் அரசாங்கம் என அதிமுகவை வசை பாடிய கமல் டிவிட்டரில் கமல் வெளியிட்ட பதிவு; "கமிஷன் அரசாங்கத்தை" துரத்தி விட்டு "mission அரசாங்கம்" அமைக்க கரம் கோர்க்கவேண்டும் . தமிழகத்தில் தொழில்முனைவோருக்கான புறச்சூழல் புதர் மண்டிக் கிடக்கிறது; இந்தக் காட்டைத் திருத்தும் முன்னத்தி ஏராக மக்கள் நீதி மய்யம் இருக்கும். "கமிஷன் அரசாங்கத்தை" துரத்தி விட்டு "mission அரசாங்கம்" அமைக்க  தொழில்முனைவோர் கரம் கோர்க்கவேண்டும்.   https://twitter.com/ikamalhaasan/status/1338387365862096898?s=20...