ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது! –
பராமரிப்புப் பணி காரணமாக 15 நாட்கள் ஆலை மூடப்படுவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் இன்று (மார்ச் 29) அறிவித்துள்ளது.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை நிறுவ நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஒரு வாரமாகப் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.
குமரெட்டியாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் இன்று 46ஆவது நாளாக நீடிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பியும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் தங்கள் எதிர்ப்பைக் காட்டிவருக...









