செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

இணயத்தை வைரலாக்கும் வடிவேலுவின் நேசமணி சுத்தியல் மீம்ஸ்… மோடியை வம்புக்கு இழுக்கிறதா பாகிஸ்தான்…!

இணயத்தை வைரலாக்கும் வடிவேலுவின் நேசமணி சுத்தியல் மீம்ஸ்… மோடியை வம்புக்கு இழுக்கிறதா பாகிஸ்தான்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  பாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதற்கு தமிழில் பெயர் என்ன? என கேட்டிருந்தது. இதற்கு குறும்புக்கார நெட்டிசன் ஒருவர் பதில் அளிக்கையில், 'இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்' என கூறியிருக்கிறார். அவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இதுதான் இன்றைய டாப் டிரெண்டிங். இந்த நேசமணி யார்? 10 வருடங்களுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நம்ம வைகைபுயல் வடிவேலுதான். அந்த படத்தில் ரமேஷ் கண்ணா மாடியில் ஆணியை பிடுங்கும் போது தவறுதலாக சுத்தி மாடியில் இருந்து கீழே நின்ற வடிவேலு நடு...
இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி டில்லியில் உள்ள காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை..!

இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி டில்லியில் உள்ள காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சமீபத்தில்நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், டெல்லி ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்....
நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..!

நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நெல் ஜெயராமனின் வாழ்க்கையை படமாக்கும் சசிகுமார்..! திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் உயிரிழந்தார். நெல் ரகங்களைத் தேடிக் காத்த நெல் ஜெயராமன் குறித்த செய்தியை இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக தமிழக அரசு வைத்திருக்கிறது இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார், இவருடைய வாழ்க்கை படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘இன்று பாடமாக வந்திருக்கும் உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் விரைவில் படமாக வரும்... அதற்கான பணிகளில் நாங்கள் இருக்கிறோம்’ என்று பதிவு செய்திருக்கிறார்....

மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி பதவியேற்பு விழாவில் ராகுல், சோனியா பங்கேற்கிறார்கள் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை (30-ம் தேதி) மாலை 7 மணியளவில் இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். இவ்விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அழைப்பையேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத் ஆகியோர் மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார்கள்....
சினிமா தயாரிப்பாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்..!

சினிமா தயாரிப்பாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சமீபத்தில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தலிலும் 13 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வான பின் நடந்த தேர்தலில் முக.ஸ்டாலின் இமாலய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமையில் தயாரிப்பாளர்கள் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலனோடு சக தயாரிப்பாளர்கள மிட்டாய் அன்பு, T.T. சுரேஷ், P.V. பிரசாத், கோவை தமிழரசன், S.R. முருகேசன், நாதன், சக்கரபாணி, Associate உறுப்பினர்கள் ஆறுமுகம், கண்ணன், ஜான் பீட்டர் ஆகியோர் சென்றிருந்தனர்....
திட்ட அனுமதி வழங்க நடிகைகளை லஞ்சமாக கேட்ட அமைச்சர்கள் சு.சாமி கொளுத்தி போட்ட வெடி..!

திட்ட அனுமதி வழங்க நடிகைகளை லஞ்சமாக கேட்ட அமைச்சர்கள் சு.சாமி கொளுத்தி போட்ட வெடி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  திட்ட அனுமதி வழங்க லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறோம். அதிலும் லஞ்சமாக ரொக்கம், நகைகள், பொருட்களை கேட்பார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்களாம்... லஞ்சமாக பணமோ, நகையே, பொருளோ கேட்கவில்லை. அதற்கு பதிலாக 2 பாலிவுட் நடிகைகளை கேட்டிருக்கிறார்களாம். சும்மாவே பரபரப்பை ஏற்படுத்தும் சுப்பிரமணிய சுவாமி காதில் இந்த விஷயம் போனால் சும்மா இருப்பாரா... தனக்கான பக்கத்தில் இப்படி திட்ட அனுமதிக்கு நடிகைகளை லஞ்சமாக கேட்கும் அமைச்சர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். என்ன நடவடிக்கை என்பதை பொறுத்து லஞ்சமாக நடிகைகளை கேட்ட அமைச்சர்கள் பெயரை சுப்பிரமணிய சுவாமி வெளியிடுவாராம். சமீபத்திய தேர்தலில் மீண்டும் பாஜக முழு மெஜாரட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. நாளை 30 தேதி தான் மோடி மீண்டும் பிரதமராக பதவி ...
முதல்வராக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்..!

முதல்வராக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் நடந்த பாராளுமன்ற,  சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி நாளை ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி இவர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிலர் உடன் வந்தனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வருகையையொட்டி வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கட்சியினர் பல முக்கிய சந்திப்புகளில் வரவேற்பு அளித்தனர்....
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு திமுகவுக்கு அழைப்பு இல்லை – டி.ஆர்.பாலு பகீர்

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு திமுகவுக்கு அழைப்பு இல்லை – டி.ஆர்.பாலு பகீர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி திமுகவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் 303 இடங்களை பிடித்து நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழா வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளின் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு வந்தத...
ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் ஸ்டாலின்..!

ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் ஸ்டாலின்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆந்திர முதல்-மந்திரியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினையும் விழாவில் கலந்து கொள்ள அழைத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. அதே நாள் தான் மோடியும் பிரதமராக பதவி ஏற்கிறார். ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பை ஏற்று ஸ்டாலின் ஆந்திரா செல்கிறார்....
தேர்தலில் இமாலய  வென்ற மோடியின் வாழ்க்கை படம் பிளாப் ஆனதா… மக்கள் ஆதரவு இல்லை…  போதிய  வசூல் இல்லை..!

தேர்தலில் இமாலய வென்ற மோடியின் வாழ்க்கை படம் பிளாப் ஆனதா… மக்கள் ஆதரவு இல்லை… போதிய வசூல் இல்லை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. ஓமங்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார். ‘பிஎம் நரேந்திர மோடி’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நேரம் என்பதால் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மே 24-ந்தேதி படம் திரைக்கு வந்தது. ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்த மோடி எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி படம் விளக்குகிறது பா.ஜனதா தலைவர்கள் பிஎம் நரேந்திர மோடி படத்தை பாராட்டினாலும் பொதுவெளியில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான விமர்சகர்கள் படத்துக்கு குறைந்த மதிப்பெண்களே வழங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் மூன்று ...