சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!?

HOME SLIDER, NEWS, politics, கட்டுரை, செய்திகள், தமிழக அரசியல்
    ராமதாஸ் வசம் உள்ள பலகோடி வன்னியர் சொத்தை மீட்க அரசு முயற்சி! பொதுசொத்து வாரிய தலைவராகிறாரா சி.என்.இராமமூர்த்தி!? வன்னிய முன்னோர்கள் மற்றும் பெரியவர்கள் தாங்கள் ஈட்டிய பெரும் சொத்துக்களை இன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். இந்த வன்னிய பெரியோர்கள் அமைத்து இருக்கும் அறக்கட்டளைகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் பத்து லட்சம் கோடி ருபாய் பெறுமான சொத்துக்கள் இந்த அறக்கட்டளைகளுக்கு சொந்தமாக உள்ளது. இந்த அறக்கட்டளைகள் எந்த நோக்கத்திற்காக அமைக்க பெற்றதோ அந்த நோக்கம் நிறைவேறாமல், காலபோக்கில் கேட்பாரின்றி இந்த அறக்கட்டளைகளின் சொத்துக்கள் சுயநல எண்ணம் கொண்டோர்  கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. அந்த அறக்கட்டளைகளின் மூலமாக வரும் பல கோடி பெறுமான வருமானங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கிட...
சேல்ஸ்மேன் அவமதித்ததால் ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்தை கார் ஷோரூமில் கொட்டிய கர்நாடக விவசாயி!

சேல்ஸ்மேன் அவமதித்ததால் ஒரு மணி நேரத்தில் 10 லட்சத்தை கார் ஷோரூமில் கொட்டிய கர்நாடக விவசாயி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    ‘நட்புக்காக’ என்ற திரைப்படத்தில் விஜயகுமாரும், சரத்குமாரும் கார் வாங்க ஷோரூமுக்கு செல்வார்கள். அப்போது அவர்களது பேச்சு, உடை பாவனையை பார்த்து ஷோரூம் ஊழியர்கள் கிண்டல் செய்வார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாக்கு மூட்டையில் கொண்டு வந்த பணத்தை கொட்டி விஜயகுமார் அதிர்ச்சி கொடுப்பார். இதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ராமனபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கெம்பேகவுடா.   இவர் நேற்று முன்தினம் துமகூரு டவுனில் உள்ள கார் ஷோரூமுக்கு கெம்பேகவுடா சென்றுள்ளார். அப்போது அவர் அழுக்கு உடை அணிந்து சென்றதாக தெரிகிறது. கெம்பேகவுடாவிடம் ஷோரூம் ஊழியர்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது விவசாய பொருட்களை எடுத்து செல்லும் வகையில் ஒரு சரக்கு வேனை வாங்க வந்துள்ளேன் என்று கெம...
”அதற்கு” ஆசைப்பட்டு ஹனிட்ராப் மோசடியில் சிக்கி 49 லட்சம் பறிகொடுத்த ஜோதிடர்!

”அதற்கு” ஆசைப்பட்டு ஹனிட்ராப் மோசடியில் சிக்கி 49 லட்சம் பறிகொடுத்த ஜோதிடர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    பிரச்சினைகளை தீர்க்க வந்த ஜோதிடரின் சபல புத்தியை சாதகமாக்கி அவருக்கே பிரச்சனை கொடுத்து 49 லட்சத்தை பறித்துக் கொண்ட ஹனிடிராப் தம்பதி மோசடி. கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த தம்பதிகள் வீட்டில் பூஜை செய்ய வந்த பூசாரியையே தங்கள் வலையில் விழச் செய்து  பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா  சனிவாரசந்தை பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பவ்யா. இவர் தனது இரண்டாவது கணவரான ராஜு என்கின்ற குமாருடன் சேர்ந்து பணம் பறிக்கும் மோசடிகளை அரங்கேற்றியுள்ளார். இரண்டாவது கணவருடன் மங்களூரில் உள்ள பதவினங்கடி என்ற பகுதியில்  வாடகை வீடு எடுத்து தங்கி வசித்து வந்த பவ்யா, வீட்டில் நிம்மதி இல்லை என்று கூறி சிக்கமகளூரு வைச் சேர்ந்த அர்ச்சகரை பூஜைகள் செய்ய அழைத்து வந்தனர்.   பூஜைகள் நடந...
பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான நாடுகளில் கொரானாவால் முடங்கிய “தொழில்”

பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான நாடுகளில் கொரானாவால் முடங்கிய “தொழில்”

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், கட்டுரை
    பாலியல் சுற்றுலா மற்றும் விபச்சார விடுதிகள் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளன. மாலுமிகள் செல்லும் இடங்களில் எல்லாம் விபச்சார விடுதிகளும் அதிகரித்து வருவதாக, 18 ஆம் நூற்றாண்டிலிருந்து  கூறப்படும் புகார் ஆகும். உலகில் இன்னும் பல நாடுகளில் பாலியல் சுற்றுலா மிக பிரபலமாக உள்ளது. இந்த நாடுகளில் பாலியல் தொழிலாளர்களாக பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உள்ளனர். சில நாடுகளில் இதற்கென தனிப்பட்ட பகுதிகள், சிறப்புச் சட்டங்கள் உள்ளன. பாலியல் சுற்றுலா அல்லது செக்ஸ் டூரிஸத்திற்கு பெயர் பெற்ற நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.     ஆசியாவின் செக்ஸ் தலைநகரான தாய்லாந்து கடந்த இரண்டு  நூற்றாண்டுகளில் , தாய்லாந்தின் பல நகரங்கள், பாலியல் சுற்றுலாவின் பெரிய மையங்களாக மாறிவிட்டன. தாய்லாந்தில் விபச்சாரம் சட்டவிரோதமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு வ...
கடும்மழை, நிலச்சரிவு வரலாறுகாணாத வெள்ளம் துண்டிக்கப்பட்ட “எந்திரன்” பட சூட்டிங் ஸ்பாட்!

கடும்மழை, நிலச்சரிவு வரலாறுகாணாத வெள்ளம் துண்டிக்கப்பட்ட “எந்திரன்” பட சூட்டிங் ஸ்பாட்!

flood news, HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, மலைப்பகுதிகள் மற்றும் மழைக்காடுகளை அதிக அளவில் கொண்ட நாடாகும். அங்குள்ள ‘மச்சு பிச்சு’ என்ற 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மலை நகரம் உலகப் புகழ் பெற்றது. இதைக் காண உலகெங்கிலும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பெரு நாட்டிற்கு வருகை தருகின்றனர்.   தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தில் முதல் முறையாக இந்த மச்சு பிச்சு மலைகள் இடம்பெற்றன. அந்த படத்தில் வரும் ‘கிளிமாஞ்சாரோ’ பாடல் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மலைப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட பெருமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மச்சு பிச்சு செல்லும் பாதை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளன. இ...
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த டிசம்பா் 19-ம் தேதி தொடங்கி ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்றது இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர். இதை தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில்,  நாமக்கல்லை சேர்ந்த கீதாஞ்சலி, பிரவீன்,பிரசன் ஜித்தன் ஆகியோர் தலா 710 - மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் உள்ள 6,999, எம்.பி.பிஎஸ் 1,930 பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு ...
4 கோடி மக்களை வறுமையில் தள்ளிய மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

4 கோடி மக்களை வறுமையில் தள்ளிய மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
4 கோடி மக்களை வறுமையில் தள்ளிய மத்திய அரசு- ராகுல் காந்தி குற்றச்சாட்டு! மத்திய அரசின் தவறான பொருளாதார செயல்பாடுகளால் இந்தியாவில் 4 கோடி போ் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா். இதுதொடா்பாக ட்விட்டரில் அவர் கூறியதாவது, நல்ல நேரம் வரப்போகிறது என கூறி ஆட்சியைப் பிடித்தவா்கள் என்ன செய்துள்ளாா்கள்? ‘நாம் இருவருக்கு மட்டுமே நலன்’ என்ற கொள்கையை பின்பற்றி நமது சகோதர, சகோதரிகளில் 4 கோடி பேரை வறுமை நிலைக்கு தள்ளியுள்ளனர். 4 கோடி என்பது வெறும் எண்கள் அல்ல. ஒவ்வொருவரும் நம் நாட்டில் வாழும் மனிதா்கள். பொருளாதாரரீதியாக சிறப்பாக வாழும் வாய்ப்பு இருந்தும் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாஜகவால் இந்தியாவுக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா். இந்தியாவில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பி...
சம்பளம் வழங்காததால் அரசு அலுவலகத்தை சூறையாடி ரகளை செய்த ஆசிரியை சஸ்பெண்ட்!

சம்பளம் வழங்காததால் அரசு அலுவலகத்தை சூறையாடி ரகளை செய்த ஆசிரியை சஸ்பெண்ட்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியைச் சேர்ந்தவர் தைலம்மை. மணமேல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை, அதிகாரிகளுக்கு முறையாக தகவல் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான், இவருக்கு கடந்த சில மாதங்களாவே ஊதியம் வழங்கப்படவில்லை, வட்டாரக் கல்வி அலுவலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தைலம்மை, மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி உடைத்திருக்கிறார் மேலும், ஆத்திரம் தீராத அவர் அங்கிருந்த ஆவணங்களை தூக்கியெறிந்ததோடு, வட்டாரக் கல்வி அலுவலரை தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிரு...
நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது – முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது – முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

HOME SLIDER, NEWS, politics
  நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது - மம்தா பானர்ஜி பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகை விடும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகை விடும் தேசிய பணமாக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு கடும் எ...
“புஷ்பா” பட பாணியில் செம்மரம் கடத்த முயன்ற 58 பேர் கைது

“புஷ்பா” பட பாணியில் செம்மரம் கடத்த முயன்ற 58 பேர் கைது

HOME SLIDER, NEWS, செய்திகள்
      அல்லு அர்ஜுன் நடிப்பில் சமிபத்தில் திரைக்கு வந்து மெகா ஹிட் அடித்த படம் புஷ்பா. செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தும் கதாஇதான் இது. இப்போது அதே பாணியில் செம்மர கட்டைகளை வெட்டி கடத்த முயன்ற தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில், புத்தானம் அருகே உள்ள, சென்னை - நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ய முயன்றனர். அப்போது லாரியில் இருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். மேலும், கோடாரிகளை வீசி காவல்துறையினர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இருப்பினும், காவல்துறையினர் லாரியையும் அதனுடன் சென்ற காரையும் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதையடு...