ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பஸ்-ஆட்டோ மோதி விபத்து: மத்தியபிரதேசத்தில் 13 பேர் பலி!

பஸ்-ஆட்டோ மோதி விபத்து: மத்தியபிரதேசத்தில் 13 பேர் பலி!

HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள்
பஸ்-ஆட்டோ மோதி விபத்து: மத்தியபிரதேசத்தில் 13 பேர் பலி! மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள ஜவானி என்ற இடத்தில் அங்கன்வாடி பொது சமையல் கூடம் உள்ளது. இங்கு பணியாற்றிய பெண் ஊழியர்கள் இன்று காலை பணி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்தார்கள். அப்போது எதிரே வந்த பஸ், ஆட்டோ மீது மோதியது. இதில் 12 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்....
2 ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம்!

2 ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம்!

HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள், முன்னோட்டம்
2 ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம்! சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1960-ல் கொண்டுவரப்பட்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிக நீடித்த ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி தரவுகளை பகிர்ந்துகொள்வதற்காகவும், ஒப்பந்தப்படி நீரை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காகவும் நிரந்தர சிந்து ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையமானது ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு ஒரு முறையாவது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி சந்தித்து பேசவேண்டும். கடைசியாக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளின் சிந்து நதி ஆணைய உறுப்பினர்கள் லாகூரில் சந்தித்து பேசினர். அதன்பின்னர், புல்வாமா தாக்குதல் காரணமாக 2019ல் கூ...
நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை  மறித்த தேர்தல் பறக்கும் படை!

நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், முன்னோட்டம்
நடிகர் கமல்ஹாசன் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை! தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாகன சோதனை நடத்தி வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பயணித்த பிரசார வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற கமல்ஹாசனின் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனைக்கு பிறகு கமல் ஹாசன் தனது பயணத்தை தொடர்ந்தார்....
2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

helth tips, HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்! இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு தவணைகள் செலுத்தப்படவேண்டும். இதுவரை 4.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர், இரண்டு தவணை தடுப்பூசிக்கு இடையிலான கால அவகாசத்தை  நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6-8 வாரம் என நீட்டிக்க வேண்டும் என்றும், இரண்டாம் தவணைக்கான அவகாசத்தை நீட்டிக்கும்போது அதிக பலனளிப்பதாகவும் மத்திய அரசு கூற...
ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – திருமா

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – திருமா

HOME SLIDER, NEWS, politics
  ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும்! இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அதற்கான நீதி வழங்கப்படாத நிலை உள்ளது. இது தொடர்பான விவாதம் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான தீர்மானம் நாளை மார்ச் 22ஆம் தேதி மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் ...
வெளி மாநிலத்தவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம் தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

வெளி மாநிலத்தவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம் தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

HOME SLIDER, NEWS, politics
  வெளி மாநிலத்தவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயம். தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!! தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தலங்களுக்கு மீண்டும் இ-பாஸ் சான்றிதழ் கட்டாயம் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் அதிகமாக வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், அனை...
ஆணுக்கு பெண் சமம் ‘கேங்மேன்’ வேலை பார்க்கும் இளம்பெண்!

ஆணுக்கு பெண் சமம் ‘கேங்மேன்’ வேலை பார்க்கும் இளம்பெண்!

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள், முன்னோட்டம்
ஆணுக்கு பெண் சமம் ‘கேங்மேன்' வேலை பார்க்கும் இளம்பெண்! ஆணுக்கு பெண் சமம் என்று கூறி வந்தாலும், ஏட்டில் எழுதி வந்தாலும் சில வேலைகள் ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை காலம் காலமாக நிலவி வருகிறது. ஆனால் அதை தற்போதைய இளம்பெண்கள் முறியடித்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் ஒரு பெண் திகழ்கிறார். கவுந்தப்பாடி அருகே உள்ள சேவாக் கவுண்டனூரை சேர்ந்தவர் ராசா. இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 29). இவருக்கும், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. சமீபத்தில் மின்வாரியத்தில் கேங்மேன் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இதையறிந்த திருநாவுக்கரசு அந்த வேலைக்கு விண்ணப்பித்தார். மேலும் மனைவி ராஜேஸ்வரியையும் விண்ணப்பிக்க சொன்னார். இதைத்தொடர்ந்து விண்ணப...
பராமரிப்பு பணியால் பயணிகள் கடும் அவதி!

பராமரிப்பு பணியால் பயணிகள் கடும் அவதி!

HOME SLIDER, NEWS, Photos, Uncategorized, செய்திகள்
ரெயில்களில் கூட்ட நெரிசல் -பராமரிப்பு பணியால் பயணிகள் கடும் அவதி! சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பணி மற்றும் தொழில் நிமித்தமாக வந்து செல்வதற்கு மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பாதை வழியாக வழக்கமாக இயக்கப்பட்டு வந்த மின்சார ரெயில் சேவைகளில் சில மாற்றங்களை ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, ரெயில் சேவைகளை குறைத்ததோடு, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் இருந்து சில குறிப்பிட்ட நேரங்களில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல், செங்கல்பட்டில் இருந்து வரும் ரெயில்களின் நேரங்களும் மாற்றப்பட்டன. பராமரிப்பு காரணமாக ரெயில் சேவை மாற்றப்பட்ட நிலையில், அதன்படி பயணிகளும்...
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் மனுக்கள் உட்படத் தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் ஏழாயிரத்து 155 வேட்பு மனுக்களும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 23 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை தொகுதிகள் தோறும் இன்று நடைபெற்றது. வேட்பு மனுக்களில் அனைத்து விவரங்களும் உள்ளனவா? முறையாகச் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளனவா? என்பது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலித்தனர். அனைத்து விவரங்களும் முறையாக...
முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக சதி – அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள குற்றப்பிரிவு  போலீசார் வழக்கு!

முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக சதி – அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள குற்றப்பிரிவு  போலீசார் வழக்கு!

HOME SLIDER, NEWS, politics
    டாலர் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக சதி - அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள குற்றப்பிரிவு  போலீசார் வழக்கு! டாலர் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளின் மீது  கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பார்சல் மூலமாக பல நூறு கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட வழக்கில்  தொடர்புடைய சொப்னா மற்றும் அவருடைய கும்பலுக்கு, டாலர் கடத்திய வழக்கிலும் தொடர்பு இருப்பது  தெரியவந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரிக்கிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சொப்னாவின் ஆடியோ ஒன்று வெளியானது. அதில். ‘டாலர் கடத்திய வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் தொடர்பு உண்டு என கூற வேண்டும் என அமலாக்...