இணயத்தை வைரலாக்கும் வடிவேலுவின் நேசமணி சுத்தியல் மீம்ஸ்… மோடியை வம்புக்கு இழுக்கிறதா பாகிஸ்தான்…!
பாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதற்கு தமிழில் பெயர் என்ன? என கேட்டிருந்தது.
இதற்கு குறும்புக்கார நெட்டிசன் ஒருவர் பதில் அளிக்கையில், 'இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்' என கூறியிருக்கிறார்.
அவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இதுதான் இன்றைய டாப் டிரெண்டிங். இந்த நேசமணி யார்? 10 வருடங்களுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நம்ம வைகைபுயல் வடிவேலுதான்.
அந்த படத்தில் ரமேஷ் கண்ணா மாடியில் ஆணியை பிடுங்கும் போது தவறுதலாக சுத்தி மாடியில் இருந்து கீழே நின்ற வடிவேலு நடு...








