திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

NEWS

சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை

சிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினீயர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் தஷ்வந்த் குற்றம் இழைத்ததற்கான ஆதாரம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி வேல்முருகன் தஷ்வந்த் குற்றவாளி என அறிவித்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றம், ஆள்கடத்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக 31 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தா...
அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்..!

அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், இன்று  அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தைச் சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன். அப்போது, அரசியலில் தனக்கு மூத்தவரான விஜயகாந்தைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். வரும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதற்கு முன்னதாக, தனக்கு நெருக்கமான பிரபலங்களையும் அரசியல் கட்சித்தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் நல்லகண்ணுவைச் சந்தித்துப் பேசியிருந்தார். பிப்ரவரி 18 நேற்று   நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். இந்த நிலையில், இன்று அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். அப்போது, நீண்டநாள் ...
நடிகை பிரியா வாரியர் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்..!

நடிகை பிரியா வாரியர் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
‘ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகப் படத்தின் இயக்குநர், நடிகை பிரியா வாரியர் மீது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதே சமயம் இந்தப் பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு வரி மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் போலீச...
சினிமாவைப் போல அரசியலில் என் பாணி வேறு, கமல் பாணி வேறு – ரஜினி

சினிமாவைப் போல அரசியலில் என் பாணி வேறு, கமல் பாணி வேறு – ரஜினி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நடிகர் கமல் வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அதன்பின் மதுரை கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்காக ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார் கமல். கமல் அழைப்பு குறித்து ரஜினி கூறும்போது, ‘என்னுடைய நண்பர் கமல் அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் கமல், பணம், புகழ், பெயர் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்ணத்தில் வந்திருக்கிறார். ஆண்டவனின் ஆசிர்வாதம் அவருக்கு கிடைக்க வேண்டும். எல்லா பயணத்திலும் கமல் வெற்றியடைய வேண்டும். சினிமாவில் அவருடைய பாணி வேறு,  என்னுடைய பாணி வேறு. அதுபோல் அரசியலிலும் அவருடைய பாணி வேறு. என்னுடைய பாணி வேறு. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பத...
திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள கமலுக்கு அழைப்பு ரஜினிக்கு இல்லை..!

திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள கமலுக்கு அழைப்பு ரஜினிக்கு இல்லை..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தி.மு.க. தலைவர் கருணாநிதியை நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு சந்தித்து பேசினார். கருணாநிதியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து விட்டு சென்ற பிறகு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடிகர் கமல்ஹாசன், கருணாநிதியை சந்தித்து பேச வேண்டும் என்று என்னிடம் கேட்டார். வாருங்கள் என்று அழைத்தேன், வந்தார், சந்தித்து இருக்கிறார். புதிய கட்சியை தொடங்க இருக்கும் அவருக்கு நானும், கருணாநிதியும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறோம். கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து பெற்றபோதும் நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டிக்கும் வகையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். ஆனால் இதுவரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை....
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் -கமலை சீண்டுகிறாரா கவுதமி..!

அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் -கமலை சீண்டுகிறாரா கவுதமி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஆண்டாள் கோவிலுக்கு நடிகை கவுதமி  வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர்  கூறியதாவது:- ஆண்டாளின் பக்தையான நான் அவரை தரிசிக்க இங்கு வந்தேன். புற்றுநோயைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை. இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் உயிர் வாழ இயலும். மன தைரியம் மிகவும் அவசியம். இதற்கு நான்தான் சாட்சி. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகம் வர வேண்டும். அரசுகள் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். நடிகர்கள் முதலில் அவர்களது கட்சியின் பெயர், கொள்கைகள், திட்டங்களை அறிவிக்கட்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக...
3வது திருமணம் செய்தார் இம்ரான்கான்..!

3வது திருமணம் செய்தார் இம்ரான்கான்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. இவர் கடந்த 1995-ம் ஆண்டு மே 16-ந்தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் ஆன 9 ஆண்டுகளில் 2004-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் 2015-ம் ஆண்டில் ஜனவரி 8-ந்தேதி டி.வி.தொகுப்பாளினி ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார். அதன்பின்னர் இம்ரான் கான் புஷ்ரா பிபி மேனகா என்ற ஆன்மீக ஆலோசகரை கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது இம்ரான் கான் அந்த செய்தியை...
புதிய கட்சி தொடக்க விழாவை எளிமையாக நடத்த விரும்பும் கமல்

புதிய கட்சி தொடக்க விழாவை எளிமையாக நடத்த விரும்பும் கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தமிழக அரசியல் களத்திற்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறார். அன்றைய தினமே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளார். 21-ந்தேதி (புதன்கிழமை) காலை ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை மற்றும் மதுரையில் 4 பொதுக்கூட்டங்களில் பேச உள்ளார். இதில் மதுரையில் 21-ந்தேதி மாலை நடைபெற உள்ள பொதுக் கூட்டம் தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த கூட்டத்தை அரசியல் கட்சி தொடக்க விழா மாநாடு போல நடத்த கமல்ஹாசனின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி தொண்டர்களை திரட்டும் ஏற்பாடுகளையும் அவர்கள் ஓசையின்றி செய்து வருகிறார்கள். கமல்ஹாசனுக்கு ஏற்கனவே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நற்பணி மன்ற ரசிகர்கள் உள்ளனர். சமீப காலமாக ...
திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலில் பயங்கர தீ விபத்து

திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தர் கோவிலில் பயங்கர தீ விபத்து

HOME SLIDER, NEWS, செய்திகள்
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் நாட்டின் தலைநகர் லாசாவில் மிகவும் பழமைவாய்ந்த புத்தவிகார் உள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஜோஹாங் கோயில் கடந்த 2000-ம் ஆண்டில் புராதன சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இந்நிலையில், நேற்று மாலை இந்த கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கவுதம புத்தர் தனது 12 வயதில் இருப்பது போன்ற சிலை இங்கு உள்ளது. மேலும், பல விலைமதிப்பு மிக்க அரிய பொருட்கள் இங்குள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை....
கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு

கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி புதிய கட்சி தொடங்குகிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து எந்த ஊர் வழியாக சுற்றுப்பயணம் செல்வது, எங்கு மக்களுடன் உரையாடுவது என்பது குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், காலை 7.45 மணியளவில் அப்துல் கலாம் இல்லத்துக்கு வருகிறார். காலை 8.15 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பள்ளிக்கு வருகிறார். காலை 8.50 மணியளவில் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கிறார். காலை 11.10 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு வருகிறார். காலை 11.20 மணியளவில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்திலிருந்து மதுரைக்கு கிளம்புகிறார். நண்பகல் 12.30 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் கமல் பொதுக்கூட்டம் நடத்துகிறார். பிற்பகல் 2.30 மணியளவில் பரம...