திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

NEWS

ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு

ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே மதுபான கடைகளை நடத்தி வருகிறது. 2016-ல் 7 ஆயிரத்து 100 மதுபான கடைகள் இருந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து கட்சிகளுமே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தன. இதற்கிடையில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனதும் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் 3,320 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுக் கடைகளின் எண்ணிக்கை 2,830 ஆக குறைந்தது. பின்னர் மதுக்கடைகள் திறக்க ஏதுவாக சாலைகளின் பெயர்மாற்றம் நடந்தது. மேலும் நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகள் பற்றி சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்தது. இதையடுத்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது 5 ஆயிரம் மதுக்கடைகள் உள்ளன. படிப்படியாக மதுவில...
புற்று நோய்க்கு எதிரான வெற்றியாளர் நடை பயணத்துக்கு கவுதமி அழைப்பு..!

புற்று நோய்க்கு எதிரான வெற்றியாளர் நடை பயணத்துக்கு கவுதமி அழைப்பு..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
உலக புற்று நோய் தினம். இதை வலியறுத்த எங்களது Life Again Foundation வெற்றியாளர்களின் நடை- Winner's Walk  என்ற தொடர் நடை நிகழ்வை  நாளை காலை 7 மணிக்கு அடையார் ஆல்காட் பள்ளி வளாகத்தில்  உள்ளது. இன்றைய நடைமுறை உலகில் தவிர்க்க முடியாத நோய்களில் ஒன்றாக உள்ளது புற்றுநோய். இந்தியர்களான நாம் அன்றாடம் பலத்தரப்பட்ட புற்றுநோய்களுக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறோம். இதை எதிர் கொள்வதற்கு நம்மிடமுள்ள மிகப்பெரிய ஆயுதம் அதை பற்றி அறிந்து கொள்வதும் அதற்காக தயாராக இருப்பதும் தான். உறுதியான மனதும், உடனடியாக அணுகுமுறையும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள இன்றியமையாதவை. புற்றுநோயை விடவும் பெரிய போராட்டமும் சவாலும் எதுவும் கிடையாது. இந்த புற்றுநொயை உண்மையான உறுதியுடனும் புன்னகையுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டு வென்ற நாயகர்கள் பலர் உண்டு.  இவர்களே எனக்கு மிகப்பெரிய முன்னுதாரணங்கள். எங்களது இந்த வெற்றியாளர் நடை -  ...
பணம்,புகழ் படுத்தும் பாடு மாடலிங் நடிகைகளின் அடச்சீசீசீ லெவல்..!

பணம்,புகழ் படுத்தும் பாடு மாடலிங் நடிகைகளின் அடச்சீசீசீ லெவல்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சீ அளித்த சகோதரிகள்..! அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடலிங் சகோதரிகள் ஜிஜி ஹடிட். பெல்லா ஹடிட். இவர்கள் இருவரும் மாடலிங்கில் சிங்கிள் பீஸ், டூ பீஸ் என பல நீச்சல் உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடிப்பார்கள். இவர்களுக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு இதழின் அட்டை படத்திற்காக சகோதரிகள் இருவரும் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிர்ச்சியளித்திருக்கிறார்கள். இது தவிர தனித்தனியாகவும் நிர்வாண போஸ் கொடுத்திருக்கிரார்களாம். இந்த புத்தகம் மார்ச் மாதம் தான் வெளியாக உள்ளது அதற்குள் சகோதரிகள் முந்திக்கொண்டு தங்கள் நிர்வாண அழகை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகி இருக்கிறது அந்த படங்கள்....
ரஜினியின் பாபா சின்னத்தில் தொடரும் மாற்றங்கள்… தாமரை போனது இப்போது மாயமான நாகம்..!

ரஜினியின் பாபா சின்னத்தில் தொடரும் மாற்றங்கள்… தாமரை போனது இப்போது மாயமான நாகம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஆன்லைன் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. முதல்கட்டமாக மாநில அளவில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் வேலூர் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். நேற்று நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றம் மூலம் அதிக எண்ணிக்கையில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். எனவே பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி ரசிகர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள். மகளிர் அணி அமைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இளைஞர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. விவசாயிகள் ...
ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்: கடும் எதிர்ப்பை அடுத்து முடிவை கைவிட்டது மத்திய அரசு

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்: கடும் எதிர்ப்பை அடுத்து முடிவை கைவிட்டது மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது, இதனால் விமான நிலைய சோதனையின் போது பாஸ்போர்ட்டில் உள்ள மேக்னடிக் ரீடரை ஸ்கேன் செய்கையில் எளிதாக விபரங்களை தெரிந்துக் கொள்ள முடியும். எனவே, குடிமக்களின் விபரங்களை பாதுகாக்கும் முயற்சியாக பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை வெளியுறவுத்துறை நீக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது. மேலும், குடியுறவு சோதனை (ECR) தேவை என்ற நிலையில் உள்ள பாஸ்போர்ட்களை ஆரஞ்சு நிரத்தில் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களை பாகுபாடு பார்த்து பிரிக்கும் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். இந்நிலையில், பாஸ்போர்ட் கடைசி பக்கம் நீக்கம் ...
மோடி கருத்துக்கு எதிர்ப்பு… பாஜக ஆபீஸ் வாசலில் பகோடா கடை போட்ட இளைஞரகள்..!

மோடி கருத்துக்கு எதிர்ப்பு… பாஜக ஆபீஸ் வாசலில் பகோடா கடை போட்ட இளைஞரகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மோடி கருத்துக்கு எதிர்ப்பு... பாஜக ஆபீஸ் வாசலில் பகோடா கடை போட்ட இளைஞரகள்..! சமீபத்தில்  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடியிடம், ஒவோர் ஆண்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கடந்த 2013-ல் கொடுத்த வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "பக்கோடா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிப்பவர்கூட வேலைவாய்ப்பை பெற்றவர்தானே" என பதிலளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'கர்நாடகா ஃபார் எம்ப்ளாய்மென்ட்' (Karnataka for Employment) என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜக அலுவலகம் முன்னர் பக்கோடா கடை போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் நீல நிறையில் உடை அணிந்திருந்தனர். இந்த அமைப்பானது, வேலையில்லை என்றால் வாக்கு இல்லை என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அமைப்பின் தலைவர் முட்டுராஜ் கூறும்போது,...
பிப்.2ல் பதில் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் நித்தி கைது செய்யப்படுவார் – நீதிபதி எச்சரிக்கை

பிப்.2ல் பதில் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் நித்தி கைது செய்யப்படுவார் – நீதிபதி எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, செய்திகள்
மதுரை ஆதீன மடாதிபதியாக நித்தியானந்தா பொறுப்பேற்றது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்றத்தை மதிக்காமல் இருப்பதற்கு நித்தியானந்தாவிற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யாவிட்டால் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது 293வது மடாதிபதியாக நித்தியானந்தாவை அறிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. நித்தியானந்தாவை ஆதீனமாக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த ஜெகதலப் பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார். சட்ட விரோதமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதாக ஜெகதலப்பிரதாபன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு நித்தியானந்தா தான் தான் 293வது ஆதீ...
இந்தியாவில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்வு..!

இந்தியாவில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்வு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில்  கடந்த பத்து ஆண்டுகளில் திருமணமாகாத பெண்கள்  காண்டம் பயன்படுத்தும் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.குறிப்பாக 20 - 24 வயது பெண்கள் காண்டம் பயன்படுத்துவது அதிகம் என தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத பெண்களும், பாலியல் தொழில் செய்யும் பெண்களும் பாதுகாப்பான முறையில் பாலுறவு செய்ய விரும்புகின்றனர். 8 ஆண்களில் 3 பேர் கருத்தடை என்பது பெண்களின் பொறுப்பு என்று எண்ணுகிறார்கள். ஆண்கள் பாதுகாப்பான உறவு குறித்து கவலை கொள்வதில்லை என்றும் ஆய்வில் தெரிகிறது இந்த தகவல்கள் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. 99% ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கருத்தடை முறையை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். இதில் 15 - 49 வயதுடைய திருமணமான பெண்களில் 54% பேர் கருத்தடை மாத்திரைகளை பயன்ப...
நடிகர்கள் ரஜினி-கமலுக்கு போட்டியாக உதயநிதியை களமிறக்கும் திமுக..!

நடிகர்கள் ரஜினி-கமலுக்கு போட்டியாக உதயநிதியை களமிறக்கும் திமுக..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசியலுக்கு வர விரும்புகிறேன், கட்சி வேலையில் ஈடுபடுகிறேன் அதை பொறுத்து வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின்  முதன் முதலாக திமுகவின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுடன் தொண்டர்களாக கட்சிக் கொடியை கையில் ஏந்தியவாறு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்ட கையோடு போராட்ட களத்தில் இணைந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திமுகவும் நடிகராக உள்ள உதய ...
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மோடியின் பணமதிப்பிழப்பே காரணம் – எக்ஸ்.ரிசர்வ் வங்கி கவர்னர் குற்றச்சாட்டு

இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு மோடியின் பணமதிப்பிழப்பே காரணம் – எக்ஸ்.ரிசர்வ் வங்கி கவர்னர் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணம் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணமாக உள்ளது. அமைப்புசாரா தொழில்கள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தத் தொழில்களில் பல தற்போது மூடப்பட்டு விட்டன. மேலும், அந்த சமயத்தில் அவற்றை நடத்தியவர்களால் தப்பிப் பிழைத்து மீண்டும் தொழில் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தணை அதிகரித்தாலும், அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. ஜி.எஸ்.டியில் இருக்கும் குறைகளை, பிரச்சனைகளைச் சரிசெய்தால் அது நீண்ட நாட்களுக்கு பலனளிக்கும்'' என்று தெரிவித்தார்...