திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

NEWS

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாரத் ரத்னா விருதுக்கு அடுத்த படியாக நாட்டின் 2-வது உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது. இதுதவிர மதுரை தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (98), அரவிந்த் குப்தா, லட்சுமி குட்டி (கேரளா), சுபசினி மிஸ்திரி (மேற்குவங்கம்), பாஜு ஷ்யாம், சுதன்ஷு பிஸ்வாஸ், சுலாகட்டி நரசம்...
’நாளை நமதே’ ஸ்லோகனுடன்  கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..!

’நாளை நமதே’ ஸ்லோகனுடன் கிராமங்களை தத்தெடுக்க கமல்ஹாசன் திட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கிராமங்களை தத்து எடுத்து, அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுக்க நடிகர் கமல்ஹாசன் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வார இதழில் எழுதி வரும் கட்டுரையில் கூறி இருப்பதாவது:- ‘மக்களைக் களத்தில் சந்திக்க, வரும் பிப்ரவரி 21-ந்தேதி பயணம் கிளம்புகிறேன்’ என்று சொல்லியிருந்தேன். இந்தப் பயணத் திட்டத்துக்கு ஒரு பெயர் வைத்துள்ளோம். ‘நாளை நமதே’. ஆம், அந்தப் பயணத்திட்டத்துக்கு நாங்கள் வைத்துள்ள பெயர் இது தான். அவர் ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை, அவை நல்ல ஞாபகங்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளோம். நான் ஏதோ சக்கரத்தைப் புதிதாக வடிவமைத்தவன் போல் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஏற்கெனவே அதைக் கண்டுபிடித்துச் சுழலவிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போய்ப் பாடம் கற்றேன். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப்புகளுக்குச் சென்று அவர்களின் நற்பணிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு அதை அப்படியே நகலெடு...
பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
பத்மாவத் படத்தை திரையிடலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மீறி பத்மாவத் படத்துக்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு அருகில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள், மால்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தனர். இதனால், சேதம் ஏற்படுத்திய கும்பலை விரட்ட போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள்  கலைந்து சென்றனர். இந்த வன்முறை தொடர்பாக ஏராளமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை நீடிப்பதால், அகமதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இன்று மாலை குருகி...
ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி..!

ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப்படுத்தும் ராணி முகர்ஜி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
ராணி முகர்ஜி தனது ஹிச்சி திரைப்படத்தை 5 மொழிகளில் விளம்பரப் படுத்த உள்ளார். ராணி ஹிச்சி திரைப்படத்தின் மூலம் சமூகத்திற்க்கு மிகமுக்கிய கருத்தினை தெரிவிக்க உள்ளார்.இப்படத்தின் விளம்பரம் மற்றும் ரிலீஸை 5 மொழிகளில் செய்யது இப்படத்தினை அதிகமாக மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். https://youtu.be/nLSaCFlXn-g ராணி முடிந்தவரை ஹிச்சி திரைப்டத்தை அதிக மக்களிடையே கொண்டு செல்ல மராத்தி,பெங்காலி,பஞ்சாபி,ஹிந்தி மற்றும் போஜ்புரி போன்ற 5 வித்யாசமான மொழிகளில் படத்தினை ரிலீஸ் செய்யவுள்ளார்.மேலும் தொலைக்காட்சி மூலமும் விளம்பரத்தை தொடங்கி இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். "தனக்கு ஹிச்சி திரைப்படத்தின் கதை ஒரு நடிகையாகவும் மற்றும் பொதுமக்கள் நிலையிலும் வைத்து பார்க்கும்போது மிகவும் விரும்ப வைத்துள்ளது.முடிந்தவரை இப்படத்தினை மக்களிடையே கொண்டு செல்ல முயற்ச்சிப்பேன் " ராணி கூறி...
நியூயார்க் – லண்டனுக்கு 5 மணி 13 நிமிடத்தில் பறந்த விமானம் – வேகத்தில் புதிய சாதனை

நியூயார்க் – லண்டனுக்கு 5 மணி 13 நிமிடத்தில் பறந்த விமானம் – வேகத்தில் புதிய சாதனை

HOME SLIDER, NEWS, செய்திகள்
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் அதிவேகமாக பறந்து 5 மணி 13 நிமிடத்தில் சென்றடைந்தது. பொதுவாக இது 6 மணி 6 நிமிட நேரத்துக்கு லண்டனை சென்றடையும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தை விட 53 நிமிடத்துக்கு முன்னதாக சென்றடைந்தது. இது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி 16 நிமிடத்தில் சென்றடைந்தது. அதுவே அதிவேக சாதனை படைத்ததாக கருதப்பட்டது. தற்போது நார்வேயன் ஏர்லைன்சின் ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் 3 நிமிடத்துக்கு முன்னதாக வந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக நார்வேயன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் ஹரால்டு வேன்டேம் தெரிவித்தார். தட்ப...
இந்தியாவில் எடுக்கப்பட்ட விளையாட்டு தொடர்பான படங்களுக்கு ஈரானில் விருதுகள்..!

இந்தியாவில் எடுக்கப்பட்ட விளையாட்டு தொடர்பான படங்களுக்கு ஈரானில் விருதுகள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், விளையாட்டை மையமாக கொண்ட சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. இதில் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான்கான்- அனுஷ்கா சர்மா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி, வசூல் சாதனை படைத்த ‘சுல்தான்’ படத்துக்கு 3 விருதுகள் அளிக்கப்பட்டன. அதுபோல், கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது. சிறந்த இயக்குனருக்காக ஹெல்மர் ஜேம்ஸ் எர்ஸ்கினும், சிறந்த படத்திற்காக ரவி பக்ச்சாண்ட்காவும் பெற்றிருக்கிறார்கள். இது குறித்து இயக்குனர் கூறும்போது, ‘இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பற்றிய கதையில் என்னுடைய பணி உலகளவில் பாராட்டப்பட்டதற்கு பெருமை படுகிறேன். இந்த படத்தின் ஸ்கிரிப்டுக்கு சச்சின், அவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் உதவி புரிந்தார...

வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதனை தொடர்ந்து, விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாள் தாயாரை தரிசனம் செய்தனர். அதன்பின்னர் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஆண்டாளை பற்றி இழிவாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும். ரஜினியும், கமலும் அரசியலில் எனக்கு ஜூனியர்கள். நான் சீனியர் என பேசினார். மேலும், வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி போராட்டம் நடத்தி வரும் சடகோப ராமானுஜ ஜீயருக்கு விஜயகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்....
20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு

20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில், முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை பாராளுமன்ற செயலர்களாக நியமித்தார். இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும். இதனால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இரட்டை ஆதாய புகாரில் சிக்கிய 21 எம்.எல்.ஏ.க்களில் ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததால்  அவர் மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மற்ற 20 பேர் மீதான புகார் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக,  ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடாது என்ற விதியின் கீழ் 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய...
காலா பட டப்பிங் தொடங்கினார் ரஜினிகாந்த்..!

காலா பட டப்பிங் தொடங்கினார் ரஜினிகாந்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஞ்சித் இயக்கத்தில் மிக பிரமாண்டமான செலவில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் காலா படப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டப்பிங் பணிகளில் ரஜினிகாந்த் பிசியாகியிருக்கிறார். இதற்காக டப்பிக் தியேட்டருக்கு வந்த ரஜினியை டப்பிங் தியேட்டர் நிர்வாகி கல்யாணம் வரவேற்றார். அவரோடு காலா இயக்குனர் ரஞ்சித் உடனிருந்தார்....
தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு!

தமிழ் எழுத்தாளர்களின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
Paulo Coelho, Haruki Murakami, Orhan Pamuk என பிறமொழிகளில் எழுதும் எழுத்தாளர்களை நாம் நம்மில் ஒருவராக அறிந்திருப்பதற்குக் காரணம் அப்புத்தகங்களின் தரமான ஆங்கில மொழிபெயர்ப்பே. நம்மிடம் நோபல் பரிசு வாங்குவதற்குகந்த தரம்மிக்க எழுத்தாளர்கள் இருந்த போதிலும், அவர்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாத குகைச் சித்திரங்களைப் போல் அறியப்படாமல் இருப்பது மனவேதனையை தரும் விஷயம். இக்குறையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (Zero Degree Publishing). இவர்கள் மூலம் சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டிருக்கிறது. இதன் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பா...