எனக்கு இன்னொரு முகம் இருக்கு தோற்றாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்ய வேண்டும் – கட்சியினருக்கு கமல் கட்டளை
எம்பி தேர்தல்களில் தோல்வி தழுவி இருந்தாலும் சுமார் 4 சதவீதம் ஓட்டு வாங்கி அனைவர் பார்வையில் சிக்கியவர் கமல்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கமல் பேசும்போது, நாம் நல்ல வாக்கு சதவீதம் பெற்று இருக்கிறோம். ஆனால் டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் வாக்குகளை மிகக் குறைவாகப் பெற்றுள்ளோம்.
அதற்கான காரணம் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். தேர்தல்தான் முடிந்துவிட்டதே... இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். தினந்தோறும் மக்கள் பணி செய்யுங்கள்.
மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்கு சென்று மக்கள் குறையைக் கேட்டு செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள். என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவேன்,...









