சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஜெயக்குமார்! அடுத்தடுத்த வழக்குகளில் கைது!!

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஜெயக்குமார்! அடுத்தடுத்த வழக்குகளில் கைது!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணத்துடன் கைகளை கட்டி அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களைப் பயன்படுத்துதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 21 ம் தேதி இரவு பட்டினம்பாக்கயிலுள்ள அவரது வீட்டில் காவல் கிழக்கு இணை ஆணையர் பிரபாகர் மற்றும் மாதாவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்று ஜெயக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டையார்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவானது ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் இன்ற...
இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? நாளை முதல் டி20 போட்டி!

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? நாளை முதல் டி20 போட்டி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை (24-ந் தேதி) நடக்கிறது. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அதே திறமையை இலங்கைக்கு எதிரான தொடரிலும் வெளிப்படுத்துவார...
மனைவியை கவுன்சிலராக வெற்றி பெறச்செய்த வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி சொன்ன விஜய் ரசிகர்!

மனைவியை கவுன்சிலராக வெற்றி பெறச்செய்த வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி சொன்ன விஜய் ரசிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைப்பற்றி உள்ளது. அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை இழக்க செய்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய் மக்கள் இயக்கம். இந்த வெற்றிக்கு காரணமான வாக்காளர்களுக்கு வீடுதோறும் சென்று காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். பொன்னேரி நகராட்சி 16 வது வார்டிற்கு நடைபெற்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சிலம்பரசன் என்பவரின் மனைவி மணிமாலா சுயேட்சையாக போட்டியிட்டு  337 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணி புரட்சிபாரதம் இரட்டை இலை சின்னத்தில் லதா என்பவர் 142 வாக்குகளுடன் இரண்டாம் இடமும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வினோபா 140 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்....
உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன....
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகென் ராவ்!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முகென் ராவ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘மயக்கிறியே’ என்ற பாடலின் முன்னோட்டத்தை சென்னை உள்ள திரையரங்கில் சமீபத்தில் திரையிடப்பட்டது. இப்பாடலின் முதன்மை வேடத்தை ஏற்றுள்ள பிக்பாஸ் பிரபலமான நடிகர் முகென் ராவ் ரசிகர்களிடையே திடீரெனத் தோன்றி அவர்களை ஆச்சரியப்படுத்தினார். ரசிகர்களின் உற்சாக ஆராவாரத்திற்கிடையே முகென் ராய் நடனமாடி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவருடன் இணைந்து பார்வையாளர்களும் நடனமாடி மகிழ்ந்தனர். முகென் ராவுடன் நடிகை ஆத்மிகா இப்பாடலின் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். முன்னணி மால் ஒன்றில் தனது மனதுக்கு பிடித்தப் பெண்ணை சந்திக்கும் இளைஞர் ஒருவருக்குள் உருவாகும் உணர்வுகளின் கலவை தான் ‘மயக்கிறியே’. அனிவீ இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். ஜிம்மி ரூத் இந்த இசைக் காணொலியை இயக்கியுள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவை கையாள, அப்சர் நடனம் அமைத்துள்ளார். இப்பாடலுக்கு யூடியூப்பில்...
கேரளாவில் கொரோனா தளர்வு- சுற்றுலா தலங்கள் செல்ல அனுமதி!

கேரளாவில் கொரோனா தளர்வு- சுற்றுலா தலங்கள் செல்ல அனுமதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 69 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல கேரளாவில் உள்ள வனப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களான பொன்முடி, கல்லார், மீன்முட்டி, மங்காயம், சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நாளை முதல் இந்த சுற்றுலா தலங்கள் திறக்கப்படும். பொதுமக்கள் கொரோனா விதிகளை ...
ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கண்டனம்!

ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கண்டனம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறும்போது, ‘புதினின் இந்த அறிவிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு மீதான தெளிவான தாக்குதல் ஆகும். பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிபர் மெக்ரான் ரஷ்யாவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினார். ரஷ்யா மீது ஐரோப்பா பொருளாதார தடைகளை விதிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஒருதலைபட்சமான மீறல் ரஷ்யாவின் சர்வதேச உறவை மீறுவது ஆகும். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, கிளர்ச்சியாளர் பகுதிகளை ரஷ்யா அங்கீகரிப்பதன் மூலம் போர் பதற்றத்தை தணிக்க நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளை ரஷ்யா அழித்துள்ளது. ஆனால் எங்கள் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்றார். ...
சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்!

சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஏமன் நாட்டில் அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளது. இப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் உள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதிஅரேபியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் ஐக்கிய அரபுஎமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் உள்ள விமான நிலையம், எண்ணை நிறுவ னத்தை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 3 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் சவுதிஅரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. சவுதிஅரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜிசான் நகரில் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்...
எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி!

எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை தி.மு.க. கைப்பற்றி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் எடப்பாடி நகராட்சி, அரசிராமணி, பூலாம்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. இதில் 15 வார்டுகள் கொண்ட அரசிராமணி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதியில் சேலம் தெற்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், ...
தேர்தல் கலாட்டா அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது! 8 பிரிவுகளில் வழக்கு!!

தேர்தல் கலாட்டா அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் திடீர் கைது! 8 பிரிவுகளில் வழக்கு!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சென்னை ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி அரை நிர்வாணமாக்கி தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை சென்னை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில், சென்னை ராயபுரம் 49வது வார்டில் தி.மு.க.,வினர் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முறைகேடாக ஓட்டு போட்டதாக அங்கிருந்த அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.இந்த நிலையில், சட்ட விரோதமாக கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபரை அதிமுகவினர் சிறைப்பிடித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே சிலர் பிடிபட்ட நபரை தாக்கத் தொடங்கினர்.   அப்போது, ​​பிடிபட்ட அந்த நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்...