சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜாவின் பாடல்களையும், இசையையும் ரசிகர்கள் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது. இதற்காகப் பல குழுக்கள் உருவாக்கப்பட்டுப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது என்றால் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அதில் கலந்து கொள்ள விரும்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஈ.வி.பி. திடலில் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு சிங்கப் பூரில் கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அது தடைப்பட்டுப் போனது. பெரிய இடைவெளிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் இசைக் கச்சேரியை நடத்த இருக்கிறார் இளையராஜா. மார்ச் மாதம் நடக்க இருக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ‘ராக் வித் ராஜா’ என்று தலைப்பி டப்பட்டுள்ளது....
2வது ஒருநாள் போட்டி : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்!

2வது ஒருநாள் போட்டி : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ரிஷ்ப் ப்ண்டும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்னிலும், ரிஷப் பண்ட் 18 ரன்னிலும், விராட் கோலி 18 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 43 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து இந்தியா தத்தளித்தது. அடுத்து இறங்கிய கே எல் ராகுலுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 91 ரன்கள் சேர்த்த நிலையில், ராகுல் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 64 ரன்னில் அவுட்டானார். வாஷிங்டன் ...
எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: ‘WHO’ எச்சரிக்கை!

எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: ‘WHO’ எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமைக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஒமைக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது:- கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான விஷயம். கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்ற...
ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா!

ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா! கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, ஹிஜாப் VS காவித்துண்டு என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. மாநில அரசு சீருடை அணிந்து வர வேண்டும் என  உத்தரவிட்ட நிலையில், இந்த விவகாரம் அந்த மாநில உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. உயர்நீதிமன்றம் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு பரவி விடக்கூடாது என தலைவர்கள் கவலை தெரிவித்து வர, மத்திய பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இதுகுறித்து கருத்து எழுந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற மலாலா யுசஃப்சாய், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்க...
“பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள்” உ.பி மக்களுக்கு மம்தா வேண்டுகோள்

“பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள்” உ.பி மக்களுக்கு மம்தா வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில் மயங்கி விடாதீர்கள், சமாஜ்வாடி கட்சியை வெற்றி பெறச் செய்து பா.ஜ.க.வை தோற்கடிக்கும்படி உத்தர பிரதேச மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் இரண்டு நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றார். இந்த பயணத்தின் போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுடன்  மம்தா பானர்ஜி  கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: சமாஜ்வாடி கட்சியை ஆதரித்து அவர்களை வெற்றி பெறச் செய்து, பா.ஜ.க.வை தோற்கடிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளில்...
பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு

பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் மிக உயர்ந்த மலைப்பகுதியான காமேக் செக்டாரில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.  ...
ஹிஜாப் விவகாரம் – தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக கர்நாடகாவில் சர்ச்சை!

ஹிஜாப் விவகாரம் – தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக கர்நாடகாவில் சர்ச்சை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில்,  கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர். அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடியும் காணப்பட்டனர். ஆனால் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றப்படவில்லை என்று சிவமொக்கா எஸ்.பி. லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார். அந்த கொடி கம்பத்தில் தேசிய கொடி இல்லை. அதனை நீக்கி விட்டு காவி கொடியை ஏற்றவும் இல்லை. அவர்கள் காவி கொடியை மட்டுமே கம்பத்தில் ஏற்றினர்.  அதன்பின்பு அவர்களே அந்த கொடியை கீழே இறக்கி விட்டனர் என அவர் கூறியுள்ளார். அனைவரும் மாணவர்கள் என்பதால் போலீசார் மிகவும் பொறுமையாக நடந்து கொண்தாகவும், ஆனால்  வன்முறையில் ஈடுபட்டால் கடும...
எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்!  வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன  untold veerappan story

எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story

HOME SLIDER, NEWS, story, தமிழக அரசியல், வீடியோ
  எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story     https://youtu.be/74EAa_dYhLs
சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக சட்டப்பேர்வையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, கடந்த 2021 செப்டம்பர் 13-ம் தேதி ஏகமனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 142 நாட்களுக்குப் பின் கடந்த ஒன்றாம் தேதி, ஆளுநரின் தனிச் செயலர் மூலம் நீட் விலக்கு மசோதா, தனக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீட் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் முதலில் சபாநாயகர் அப்பாவு பேசினார். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சபாநாய...
காஷ்மீர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டது கே.எஃப்.சி.!

காஷ்மீர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டது கே.எஃப்.சி.!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. நிறுவனத்தின் கிளை ஒன்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து, காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பதிவு ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டிருந்தது. அதேபோல் பீட்ஸா (Pizzahutpak) நிறுவனம் நாங்கள் அந்த நிலையுடன் நிற்கிறோம். காஷ்மீர் ஒற்றுமை தினம் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் கே.எஃப்.சி-யை புறக்கணிப்போம் என ஹேஷ்டேக் உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  டுவிட்டரில் #BoycottKFC and #BoycottPizzaHut  டிரெண்டிங் ஆனது. இது கே.எஃப்.சி. நிறுவனத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிளை ஒன்று வெளியிட்டுள்ள பதிவிற்கு கே.எஃப்.சி. நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. கே.எஃப்.சி. வெளியி...