*மகளிர் உலக கோப்பையின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!*
இந்திய நாடே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ள, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) பிரம்மாண்ட பிக்கில் பால் (Pickle Ball) நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
சமீபத்தில் உலகின் பலமான 8 அணிகள் கலந்துகொண்ட உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், அசத்தலாக விளையாடியதுடன், அணியை வழிநடத்தி, இந்தியா மகளிர் அணிக்கு முதல் உலககோப்பையை பெற்றுத் தந்து, இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர்.
இந்தியாவெங்கும் மகளிருக்கு முன்னுதாரண முகமாக மாறிய...
*'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!*
'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு ரெட்டி, போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ...
சின்ன வயது தீபாவளி அனுபவங்களை பகிர்ந்த அமைச்சர் சி.வி.கணேசன்
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் சுவாரஸ்யம்
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,வழக்கம்போல் சென்னை பிரசாத் லேப்பில் சிறப்பாக நடந்தது. 2025ம் ஆண்டு சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன்(தொழிலாளர் நலன், திறன்மேம்பாட்டுதுறை), பூச்சி.எஸ்.முருகன்( தமிழ்நாடு வீட்டுவசதிவாரியதலைவர், நடிகர் சங்க துணைத்தலைவர்) மற்றும் நா.இளங்கோவன் (அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ், ஆவடி), தேசியவிருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கடலோரகவிதைகள் ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார்(எஸ்.கே.பிக்சர்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர்.
விழ...
மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!
ஆசியக் கோப்பையில் புரிந்த சாதனைகளுக்காக, “மன சங்கர வர பிரசாத் காரு” படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு பாராட்டு விழா!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியில் திலக் வர்மாவின் தீவிரமான ஆட்டமும், மிக அழுத்தமான நேரத்தில் காட்டிய நிதானமும் முக்கிய பங்காக இருந்தது.
இயல்பிலேயே மிகச்சிறந்த பாராட்டும்...
*கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா*
*ஸ்டண்ட் சில்வாவுக்கு விருது வழங்கி கவுரவித்த கேரளா அரசு*
தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர்.
ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத...
*துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் புதுமையான இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ராகா)*
*தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்களின் மூலம் ராகங்களை ரசிகர்களுக்கு எட்டச் செய்யும் புதிய முன்னெடுப்பு*
துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும் அவரது மகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். 'தங்க மீன்கள்' படத்தில் நடித்து சிறு வயதிலேயே பாராட்டுகளை வென்ற சாதனாவின் தந்தையான வெங்கடேஷ் சங்கர், இசை மீது கொண்ட தீராக்காதலின் விளைவாக முற்றிலும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
பாரம்பரிய இசையின் ராகங்களையும் அவை திரைப்பட பாடல்களில் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்பதையும் பாமர ரசிகர்களுக்கும் சுவாரசியம் குன்றாமல் விளக்கும் வகையில் து...
*'ராக் ஸ்டார் ' அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்
'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்... பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.
பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.
பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்...
TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !!
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது.
இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த வீடியோ கேமராமேன் | சிறந்த நகல் எடிட்டர் | சிறந்த குரல் ஓவர் கலைஞர் | சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
TNIT குழுமத்தின் CEO ரகுபட் இந்த விருது விழாவை நடத்துகிறார்.
இந்த விழாவினை பற்றிய அறிமுகத்தை மீடியா நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக TNIT சார்பில் பத்திரிக்கை ஊடக ந...
தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாகக் களமிறங்கும் “PRK Productions” தயாரிப்பு நிறுவனம் !!
தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ராஜ்குமார், “PRK Productions” எனும் பெயரில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
புதிதாகக் கால் பதித்திருக்கும், “PRK Productions” நிறுவனம் வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும், நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் துவங்கிய இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு ஆர் கே செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு மோகன மகேந...