சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

ஜி.டி.நாயுடுவை மிஞ்சி மாட்டு சாணத்தில் காரை கவர் செய்த  குஜராத்தியின் புது கண்டுபிடிப்பு..!

ஜி.டி.நாயுடுவை மிஞ்சி மாட்டு சாணத்தில் காரை கவர் செய்த குஜராத்தியின் புது கண்டுபிடிப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்த யோசனைய கண்டு புடிச்சவன பாத்தா ஜி.டி.நாயுடு நாண்டுகிட்டு தொங்கிடுவாரு... அப்படி என்னத்த கண்டு புடிச்சான்... அத சொல்றதுக்கு முன்னாடி... 20 லட்சத்துக்கு சொகுசு கார் வாங்கியிருக்கார் இந்த நவீன விஞ்ஞானி!. வாங்குன காரை வெளிய நிறுத்திட்டு வீட்டுக்குள்ள போனவருக்கு திடீர்னு ஒரு சந்தேகம்... அக்னி வெயில் மண்டைய பொளக்குதே ... கார் மேல வெயில் பட்டா என்னாகும்னு யோசிக்க... பதறிட்டாரு அப்ப அவர் மண்டைக்குள்ள இந்த யோசனை ஆயிரம் வாட்ஸ் பல்ப்பா எரிஞ்சிருக்கு... உடனே ஆளுங்க கிட்ட சொல்லி கார் முழுக்க மாட்டுச்சாணத்தை பூசி மொழுகி அசத்திபுட்டாரு... அசத்தி... என்னங்க 20 லட்ச ரூபா காரை இப்படி பன்னிட்டீங்களேன்னு கேட்டா அவர் சொல்றாராம்... "மாட்டு சாணம் கிருமி நாசினி... அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாவும் இருக்கும் சூர்ய கதிர் வீச்சில் இருந்தும் தப்பிக்கலாம் என இப்படி செய்தாராம்...
உலக அழகி ஆக வேணாம் என  ராணுவத்தில் பணியில் சேர்ந்த அழகி..!

உலக அழகி ஆக வேணாம் என ராணுவத்தில் பணியில் சேர்ந்த அழகி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலக அழகியாக வாய்ப்பிருந்தும், தாய் நாட்டிற்கு சேவை செய்ய இராணுவத்தில் சேர்ந்த வீரமங்கை.! டில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர் மாணவி கரீமாகுல்கர்னி , இவர் தனது சிறு வயதில் ராணுவத்தில் சேர்ந்து நமது நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என விரும்பினார். பின் கல்லூரியின் போது ஐஏஎஸ் படித்து, நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என,ஐஏஎஸ் தேர்விற்காக தயாரானார். அதே நேரத்தில் தனது பொழுது போக்கிற்காக அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பேஜ்அன்ட் என் அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அடுத்த பேஜ்அன்ட் போட்டி சர்வதேச அளவில் இத்தாலியில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள இவருக்கு தற்போது வாய்ப்பு வந்துள்ளது. இதற்கிடையில் தனது ஐஏஎஸ் தேர்விற்காக தயாரான கரீமா அந்த தேர்வில் நுாலிழையில் வெற்றி பெற தவறினா...
காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு- மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு- மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அ.தி.மு.க அரசு விவசாயிகளை எட்டு ஆண்டுகளாக வஞ்சித்து வருவதை தொடராமல், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் திமுக் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்துவிட நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளிலும் உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விட வழிகாணாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து- அவர்களின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு சூறையாடி அழித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்ப...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதோடு நாடு முழுவதும் ராஜீவ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது....
மத்தியில் மாநில கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமையும் – வைகோ நம்பிக்கை

மத்தியில் மாநில கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி அமையும் – வைகோ நம்பிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தேச துரோக வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் தலைவர் வைகோ தமிழகத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசு அமையும். தமிழ்நாட்டில் மேலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது. நாற்று நட்ட வயலில் இயந்திரங்களைக் கொண்டு இறக்கியது தமிழ்நாட்டு வரலாற்றிலேயே நடக்காத கொடுமை. இதற்குத் தமிழக அரசு முழுக்க முழுக்க உடந்தை. காவிரி மண்டலத்து மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றார்கள்....
கமல் மீது செருப்பு வீசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தாரா ஹெச்.ராஜா… செருப்பு வீசியவரை வீட்டுக்கு அழைத்து பாராட்டியதால் சர்ச்சை

கமல் மீது செருப்பு வீசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தாரா ஹெச்.ராஜா… செருப்பு வீசியவரை வீட்டுக்கு அழைத்து பாராட்டியதால் சர்ச்சை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரச்சாரத்தின் போது கமல் மீது செருப்பு வீசிய நபரை வீட்டுக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி மகிழ்வித்துள்ளார் எச்.ராஜா. இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று கமல் பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த எதிர்ப்பால் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது பிரசார மேடையை நோக்கி காலணி வீசப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காலணி வீசியவர் பாஜகவை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதனால், கமல் மீது காலணி வீசிய நபரை பாஜக தேசியச் செயலாளா் எச்.ராஜா தனது இல்லத்திற்கு அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்துள்ளார். ஹெச்.ராஜாவின் இந்த கேவலமான செயலை பார்க்கும் போது ராஜாதான் தூண்டி விட்டு கமல் மீது செருப்பு வீச சொல்லி இருக்கலாம் என்பது தெ...
கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

கருத்து கணிப்புகளில் கூடாரம் காலியாகும் அதிமுக… நாற்காலி பிடிக்கும் திமுக..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. குறிப்பாக தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் மறைவுக்கு பின் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் அதிகம் கவனம் பெற்றது. திமுக ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டணியையும், அதிமுக பாஜகவுடன் ஒரு கூட்டணியும், தினகரனின் அமமுக தனியாகவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் தனியாகவும், நாம் தமிழர் சீமான் தனியாகவும் களத்தில் நின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடை பெற உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை நிலவுவதால் மாநில கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதோடு மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாக மத்தியில் இருந்த மோடி அரசுக்கு இணக்கமாக செயல்பட்டதோடு, மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்...
என் மீது செருப்பை வீசியவருக்குதான் அவமானம் எனக்கில்லை நான் காந்தியின் ரசிகன் – ஒத்த செருப்பு விழாவில் கமல் நையாண்டி

என் மீது செருப்பை வீசியவருக்குதான் அவமானம் எனக்கில்லை நான் காந்தியின் ரசிகன் – ஒத்த செருப்பு விழாவில் கமல் நையாண்டி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் “ஒத்த செருப்பு”. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வேளச்சேரியில் நடந்தது. இதில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசன் அரசியலில் மிக வேகமாக இருப்பதாலும், சமீபத்தில் பிரசாரம் செய்த இடத்தில் அவர் மீது செருப்பு வீசப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பார்திபனின் ஒத்த செருப்பு படவிழாவில் கண்டிப்பாக கமல்ஹாசன் செருப்பு வீச்சுக்கு பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை கமல்ஹாசனும் தனது கலகல பேச்சில் பூர்த்தி செய்தார். கமல் பேசியதாவது: ” எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். நான் திரும்ப திரும்ப படித்தேன். அதில், காந்தி ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஒரு செருப்பு தவ...
மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

மோடி,அமீத்ஷாவை பாதுகாக்க தேர்தல் கமிஷனில் விதிமுறைகள் காலில் மிதிபடுகிறது – காங்கிரஸ் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் கமிஷனில் எழுந்துள்ள பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “தேர்தல் கமிஷன் விதிகள் ஒருமித்த முடிவுக்குத்தான் முன்னுரிமை தெரிவிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு இல்லை என்கிறபோது பெரும்பான்மை முடிவை ஏற்கச்சொல்கிறது. அரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இது மிதிபடுகிறது” என்று குறிப்பிட்டார். மேலும், “பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறியதாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. ஆனால் அவை குப்பைத்தொட்டியில் போடப்பட்டு விட்டன. இந்தியாவின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கிற பணியை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டுள்ளார்” எனவு...
அதிமுக ஆட்சி முடியும் நாளில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாராம் – சொல்வது தமிழருவி மணியன்

அதிமுக ஆட்சி முடியும் நாளில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாராம் – சொல்வது தமிழருவி மணியன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தமிழ் நாட்டில் இப்போது இருக்கும் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்த மறுதினம் ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு வரும் என்கிறார் தமிழருவி மணியன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என்று நான் போகிற இடங்களில் எல்லாம் கேட்கிறார்கள். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக ரஜினிகாந்த் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார். தேர்தலில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பார். தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளோடு கூட்டணி வைத்தால் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்றால் ரஜினிகாந்த் அரசியலுக்குள்ளேயே வரமாட்டார். காரணம் இந்த இரண்டு திராவிட கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழித்து விட்டது. இதத்தான் சிஸ்டம் கெட்டு விட்டது என ரஜினிகாந்த் கூறினார். அரசியல் கட்சிக்கான அடிப்படை பணிகளை மிக நேர்த்தியாக ரஜினிகாந்த் செய்து வருகிறார் என்கிறார் தமிழருவ...