சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

மயங்கி விழுந்த சீமான்… உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

மயங்கி விழுந்த சீமான்… உடல் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்தனர் பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும் அல்லது தமிழக அரசால் மாற்று இடம் வழங்குவதற்கு உறுதி அளித்தால் மட்டுமே தற்போது உள்ள வீடுகளை அகற்றுவதற்கு அனுமதி அளிப்போம் என்று கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களை சந்தித்து பேசி வந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மய...
டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திறந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திறந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டா அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.   டெல்லி தீன்தயாளர் உபாத்யாயா மார்க்கில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இடத்தில் தி.மு.கவுக்கு கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்ணா - கலைஞர் அறிவாலயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தைத் திறந்துவைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்து தமிழகத்தில் கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தநிலையில், இன்று அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற்றது. அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும் முதல்வருமான மு....
மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக நீடிப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக நீடிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 35 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடி நீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 105.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.21 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது....
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023-ம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022-ம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. ...
பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், அங்கு அரசியலில் நெருக்கடி நிலை நிலவுகிறது. இந்தநிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது. சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதி உள்ளிட்ட கடன்களை திரும்பச் செலுத்தியதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது....
எஸ்சி/எஸ்டி பிரிவினரை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – திருமாவளவன் MP கோரிக்கை

எஸ்சி/எஸ்டி பிரிவினரை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – திருமாவளவன் MP கோரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
எஸ்சி/ எஸ்டி பிரிவு மக்களை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்தார். உத்தரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில்  இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022 (Constitution (Scheduled Castes and Scheduled Tribes) Orders (Second Amendment) Bill, 2022) என அழைக்கப்படும்  மசோதா மீது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன், எஸ்சி/ எஸ்டி மக்கள் மதமில்லா மண்ணின் மைந்தர்கள். இவர்களுக்கு மதமும் இல்லை சாதியும் இல்லை. ஆனால் இந்துக்கள்...
‘குடிபட்வா’ பண்டிகை கொண்டாட கொரோனா கட்டுப்பாடுகளை 100 சதவீதம் விலக்கிய  மாநிலம்!

‘குடிபட்வா’ பண்டிகை கொண்டாட கொரோனா கட்டுப்பாடுகளை 100 சதவீதம் விலக்கிய மாநிலம்!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. கொரோனா பரவலின் போது மகாராஷ்டிரா அதிக அளவில் பாதிக்கப்பட்டது. அங்கு தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்நிலையில், பொது இடங்களில் நாளை (ஏப்.2) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிரா மாநில புத்தாண்டான ‘குடிபட்வா’ பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் பொது இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று முதல்வர் தாக்கரே தெரிவித்துள்ளார். “குடி பட்வா என்பது புத்தாண்டின் ஆரம்பம். புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான நாள் இது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொடிய கொரோனா வைரஸை வெற்றிகரமாக எதிர்த்துப...
எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது- சீனா கருத்து!

எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது- சீனா கருத்து!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பில் இருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது என இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர் கூறி இருக்கிறாரே?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பதில் அளிக்கையில், “எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை, ஆலோசனை மூலம் சரியாக கையாள்வது என்று சீனாவும், இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளன. 3-ம் தரப்பினரின் தலையீட்டை உறுதியாக எதிர்க்கின்றன” என குறிப்பிட்டார். மேலும், “கடந்த 11-ந் தேதி இரு தரப்பினரும் நடத்திய 15-வது சுற்று பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது. எஞ்சி உள்ள பிரச்சினைகளில் தீர்வு காண்பது, அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த ...
நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் டோல்கேட் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.120 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தமிழக சுங்க சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை அறியாத சில வாகன ஓட்டிகளில் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணமும் அதிகரித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுங்கக்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்திய அரசுக்கு  கோரிக்கை விடுத்து வருகின்றனர்....
வணிக பயன்பாடு சிலிண்டர் விலை 268.50 ரூபாய் உயர்வு!

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை 268.50 ரூபாய் உயர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமையல் கியாஸ் மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.268.50 உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடுள்ள இந்த சிலிண்டரின் விலை ரூ.2,406 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.965.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பெட்ரோல் டீசல் விலையிலும் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பது ...