சனிக்கிழமை, நவம்பர் 28
Shadow

NEWS

லைகா நிறுவன சுபாஷ்கரனுக்கு மலேசியாவில் டாக்டர் பட்டம்…!

லைகா நிறுவன சுபாஷ்கரனுக்கு மலேசியாவில் டாக்டர் பட்டம்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களுக்கு மலேசியாவில் உள்ள, புகழ் பெற்ற ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. லைக்கா மொபைல் நிறுவனம், ஐரோப்பாவில் இயங்கும் பல தொலைபேசி நிறுவனங்களில் முதல் இடத்தை எட்டியுள்ளது. லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன், மனிதகுல மேம்பாட்டிற்காக, பல தொண்டுகளை ஆற்றிவருகிறார். இலங்கையின் வட கிழக்கு பகுதில் உள்ள தமிழர்களுக்கு குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆபிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடி நீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பது என்று எண்ணில் அடங்காத உதவிகளை செய்து வருகிறார், திரு சுபாஷ்கரன். அவருடைய சமூக சேவையை பாராட்டி, மலேசிய ஏம்ய்ஸ்ட் பல்கலைக் கழகம் இந்த டாக்டர் பட்டத்தை வழங்கிய...
ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020 ஜனவரியில் நடக்கிறது..!

ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020 ஜனவரியில் நடக்கிறது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் 2020! 2008 இல் துவங்கப்பட்ட ZEE தமிழ் பல்வேறு புது முயற்சிகளை செய்து வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ZEE தமிழ் சமீபத்தில் zee தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனை தொடர்ந்து தற்போது புது முயற்சியாக ZEE தமிழ் சினி அவார்ட்ஸ் நிகழ்ச்சியயை நடந்த உள்ளனர். திரையுலகத்தில் சிறந்த நட்சத்திரங்களை ஊக்கிவிக்கும் விதமாக முதன்முறை திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.ஒரு வருடத்தில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களில் சிறந்த கலைஞர்களை அந்தந்த பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளனர் இதற்காக zee தமிழ் 5 பேர் கொண்ட தேர்வு குழு ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளனர் .இந்த தேர்வு குழுவில் சுஹாசினி மணி ரத்னம் , கெளதம் வாசுதேவ் மேனன் ,பரத் ...
கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது..!

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  ரஜினிக்கு கோவா சர்வதேச பட விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்டது ஆங்கிலத்தில் பேசிய ரஜினிகாந்த் *தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழில் நன்றி சொன்னார். ( என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு நன்றி  என தமிழில் ரஜினி பேச அரஙகம் அதிர்ந்தது. மனைவி லதாவுடன் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். விழாவில் அமிதாப் பச்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்....
நடிகை நடத்திய அழகு கலை கருத்தரங்கில் ஆசீட் வீச்சில் பாதிக்கப்பட்டு மீண்ட டெல்லி பெண் அசத்தல் பேச்சை மொழி பெயர்த்த நமீதா

நடிகை நடத்திய அழகு கலை கருத்தரங்கில் ஆசீட் வீச்சில் பாதிக்கப்பட்டு மீண்ட டெல்லி பெண் அசத்தல் பேச்சை மொழி பெயர்த்த நமீதா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி' சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம். இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து *`PLUSH Boutique & Beauty Lounge'* கடையை சென்னையில் தொடங்கினார்.. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.. தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்க...
தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்..?

தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்..?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    *தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்?...தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை!* சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி உள்ளாட்சி தேர...
அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு..!

அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவு மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் தங்கள் மகன். அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது எங்கள் பாராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து தனுஷ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை தாக்கல் செய்தார். இதனை ஆராயந்த நீதிமன்றம் கதிரேசன் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்தது போலி சான்றிதழ் என்று கூறி கதிரேசன், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கதிரேசன் போலி என்று கூறும் சான்றிதழ்களின் அசலை நீதிமன்றத்தில் தாக்கல் செய் தனுஷிற்கு உத்தரவிட்டு, வழக்கை...
பத்திரிகையாளர்களின் பாராட்டோடு 125 தியேட்டர்களின் இன்று ரிலீஸ் ஆகும் மிக மிக அவசரம்..!

பத்திரிகையாளர்களின் பாராட்டோடு 125 தியேட்டர்களின் இன்று ரிலீஸ் ஆகும் மிக மிக அவசரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  125 தியேட்டர்களில் இன்று வெளியாகிறது மிக மிக அவசரம் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்.. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சில திரைப்படங்கள் முன்னறிவிப்பு இல்லாமல்...
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் ஒரு ஜனநாயக படுகொலை – முன்னாள் நிர்வாகிகள் எதிர்ப்பு

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் ஒரு ஜனநாயக படுகொலை – முன்னாள் நிர்வாகிகள் எதிர்ப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
      நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இ...
ஜப்பான் உலக திரைப்பட விழாவில் தேர்வான படத்துக்காக இயக்குனர் வசந்தை முதல்வர் எடப்பாடி பாராட்டினார்..!

ஜப்பான் உலக திரைப்பட விழாவில் தேர்வான படத்துக்காக இயக்குனர் வசந்தை முதல்வர் எடப்பாடி பாராட்டினார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  மாண்புமுகு முதலமைச்சர் . எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ”சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் ஜப்பான் உலக திரைப்படவிழாவில் விருது பெற்றதற்க்காக இயக்குனர் வஸந்தை பாராட்டினார். இலக்கியம் சார்ந்த ஒரு தமிழ் திரைப்படம் உலக அளவில் பல திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டதன் மூலமும் விருதுகளை வென்றதன் மூலமும் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்....
90 வயதிலும் நடித்து கொண்டிருக்கும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் வேண்டுகோள்..!

90 வயதிலும் நடித்து கொண்டிருக்கும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் வேண்டுகோள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    மத்திய அரசுக்கு தாதா87 படத்தின் இயக்குனரின் வேண்டுகோள். 1975 ல் தமிழ் சினிமாவில் அறிமுகம்ஆனா சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார் .நேற்று அவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது மத்திய அரசுஅறிவித்ததில் மகிழ்ச்சி இந்த தருணத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் அன்பான வேண்டுகோள் உதிரிப்புக்கள் படத்தில் மூலம் அறிமுகமான திரு சாருஹாசன் அவர்கள் தனது முதுமை காரணம் காட்டாமல் 90 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்திய நடிகர்களில் வயதான நடிகர். 1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய " தபெரனா கதெ " என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது " பெற்றார் மேலும் சிறந்த நடிகரு...